பக்கம்:பாட்டுத் திறன்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் • 289 கம்பனில் எடுத்துக் காட்டொன்றினைக் கண்டு மகிழ்வோம். கீதங்கள் இசைத்தனர் கின்னரர் கீதம் கின்ற பேதங்கள் இயம்பினர் பேதையர் ஆடல், பின்னர்ப் பூதங்கள் தொடர்ந்து புகழ்ந்தன; பூசு ரேசர் - வேதங்கள் இயம்பினர்; தென்றல் விருந்து செய்த, + . (பேதையர்-தேவமாதர்கள்; கீதம்நிறை பேதங்கள்பாடலின் பலவகை விகற்பங்கள்; ஆடல்-நடனம்; இயம்பினர்பாடினர்; பூதங்கள்- பலவகைப்பிராணிகள்; பூசுர ஈசர்அந்தண சிரேட்டர்கள்: விருந்து செய்த-புதுமையாக விசிற்று.) இது சுரசையின் வயிற்றில் புகுந்து மீண்டு வந்த அநுமனது செயலைப் பலரும் பல வகையாகக் கொண்டாடுதலைத் தெரி விக்கும் பாடல். கின்னரர் இசைத்த கீதங்கள் தேவமாதர்களின் இசை விகற்பங்கள், பிராணிகளின் புகழ்ச்சி இருடிகள் இயம்பும் வேத ஒலி-இவுைபாவும் செவிப் புலப்படிமங்கள்,தென்றலின் விருந்து கொப்புல்ப் படிமத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கப் புலப்படிவமாகும். இந்த மூவகைக் கலவை முக்கனி யின் சாற்றைப்பருகினது போன்ற இன்பத்தைத் தருகின்ற தன்றோ? சேரி முழுதும் பறையடித் தேயருட் சீர்த்திகள் பாடிடு வேன்; பேரிகை கொட்டித் திசைக ள திரகின் பெயர்மு ழக்கிடு வேன்.” இந்தப்பாடலில் ஆண்டானிடம் அடிமை பேசுகின்றான். இதில் 'பறையடித்தல்', "சீர்த்திகள் பாடுதல்', 'பேரிகை கொட்டுதல்', பெயர்முழக்குதல் இவை செவிப்புலப் படிமங்களாக கின்று அவற்றின் ஒலிகள் நமது மனக் காது’ கேட்குமாறு செய் கின்றன. . 7. கம்பரா, சுந்தா, கடல்தாவு 78. 8. கண்ணன்.எ ன் என் ஆண்டான். பா -19