பக்கம்:பாட்டுத் திறன்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் - - 39? 'அறுசுவைத் தாய உண்டி அரச!கின் அணிகத் தோடும் பெறுக’ என அளித்து வேங்தோ(டு) யாவரும் துய்த்த பின்றை கறுமலர்த் தாரும் வாசக் கலவையும் கல்க லோடும்." (அணிகம்-சேனையிலுள்ள மக்கள்;தார்-மாலை.) இது கம்பராமாயணத்திலுள்ள ஒரு பாடல். வசிட்டரின் காம தேனு விசுவாமித்திரரின் சேனைக்கு விருந்து படைத்ததைக் காட்டுவது. அறுசுவைத் தாய உண்டி சுவைப் புலப் படிமத் தைக் காட்டுவது; நறுமல த்தார் வாசக் கலவை காற்ற்ப் புலப் படிமத்தைப் பெறவைப்பது. கலவை கிலைக்காட்சி கவிதைக்குப் புது மெருகூட்டுகின்றது. கண்ணன் பாட்டில்' உண்ண உண்ணத் தெவிட்டாதே-அம்மை உயிரெனும் முலையினில் உணர் வெனும்பால்: வண்ணமுற வைத்தெனகக்கே-என்றன் வாயினிற்கொண் டுற்றுமோர் வண்மையுடையாள்.' என்ற பாடற்பகுதியில் உண்ணும் போது தெவிட்டுதல்'. 'வாயினில் ஊட்டுதல்' என்பவை சுவைப்புலப் படிமங்கள், இவை பாட்டின் சுவையை மிகுவிப்பதைக் கண்டு களிக்கலாம். இத்தகைய படிமங்களைப் பாவேந்தர் பாரதிதாசனின் பாக் களிலும் காணலாம். சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய் கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு: என்னும் கண்ணியில் குழந்தையையும் காண்கிறோம்; கன்னல் சாறு, கனி ரசம் இவற்றின் சுவையையும் அநுபவிக்கிறோம். மேலும், வீட்டின் உட்புறத்து விளைந்த தான இனிய யாழிசை கனிச்சாறு போலத் தலைவன் தலைவியை தழுவ லாயிற்று." 11. கம்பா. பாலகாண்-மிதிலை-94 12. கண்ணன்.என் தாய் - 1 18. பாரதிதாசன் கவிதைகள் - முதல் தொகுதி - 41 ஆண்குழந்தைத் தாலாட்டு. - 14. மேற்படி இரண்டாம் தொகுதி 18 பெற்றோர் இன்பம்,