பக்கம்:பாட்டுத் திறன்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 பாட்டுத் திறன் ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித் தேனில் துவைத்தெடுத்து தின் என்று தாரேனோ." என்ற பகுதிகளில் சுவைப்புலப் படிமங்கள் பாட்டதுபவத் திற்குப் பெரிதும் துணையாகப் பயன்படுவதைக் கண்டு மகிழ லாம். காற்றப்புலப் படிமங்கள்: மூக்கினால் முகர்ந்து அநுபவிக்க வேண்டிய காட்சிகளாக இருப்பவை இவை. அடியிற்கண்ட, கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ, காறுமோ? திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ? மருப் புஒசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் காற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே..!" என்ற பாசுரம் ஆண்டாள் காதல் முறுகிய கிலையில் திருச் சங்கை நோக்கி வினவுவதாக அமைந்தது. 'கண்ணபிரானின் திருவதாரத்தில் ஊறுகின்ற அமுதம் பச்சைக் கருப்பூர வாசனை யை ஒத்திருக்குமோ? அல்லது தாமரைப் பூவின் மணத்தை ஒத் திருக்குமோ? அல்லது திருப்பவளச் செவ்வாய்தான் இனிக்கு மோ?' என்று வினவுவதில் சுவைப்புலப் படிமம் கலந்த காற்றப் புலப் படிமத்தைக் கண்டு அநுபவிக்கலாம், அலவு தண்துளி அருவிநீர் அரம்பையர் ஆடக் கலவை சாந்துசெய் குங்குமம் கற்பகம் கொடுத்த பலவும் தோய்தலில் பரிமணம் கமழ்வன பாராய்." என்ற கம்பராமாயணப் பாடற்பகுதி இராமன் சீதைக்குக் காட்டும் சித்திரகூடக் காட்சிகளில் ஒன்றினைத் தெரிவிப்ப தாக அமைந்தது. அருவி ரிேல் கலந்து விடும் பல நறுமணப் பொருள்கள் தரும் வாசனையைத் தெரிவித்தல் காற்றப்புலப் படிமமாகும, கண்ணன்-என்காதலன்' என்ற பாடலில் வரும் கெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள், (3) என்ற தொடரிலும், கண்ணஎன் காந்தன்' என்ற பாட்டில் வரும், 18. காதல் நினைவுகள் அவன்மேற்பழி. 18, நாச்-திரு,7:1 17. கம்பசா. அயோ சித்திர-25 - .