பக்கம்:பாட்டுத் திறன்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் .w. பணிசெய் சந்தனமும்-பின்னும் § பல்வகை அத்தர்களும் குனியும் வாண்முகத்தான்-கண்ணன் குலவி கெற்றியிலே இனிய பொட்டிடவே-வண்ணம் இயன்ற சவ்வாதும் (1) கொண்டை முடிப்பதற்கே.--மணம் கூடு தயிலங்களும் (2) என்ற பாடற் பகுதிகளும் படிக்கும்போதே மலர், சந்தனம், அத்தர், சவ்வாது, மணம் கூடுதைலம்-இவை காற்றப் புலப் படிமங்களை எழுப்புகின்றன அன்றோ? பாவேந்தரின் பாடலொன்றில் வரும், மூடத்தனத்தின் முடைநாற்றும் வீசு கின்ற காடு மணக்கவரும் கருப்பூரப் பெட்டகமே." - என்ற அடிகளில் மூடத்தனத்தின் முடை காற்றம் கம் மூக்கில் படுவதையும் கர்ப்பூரத்தின் வாசனையை உணரும் நிலையில் அழகிய பெண் குழந்தையையும் காண்கின்றோம். மேலும்; குப்பை மணக்கக் குடித்தெருவெல் லாம் மணக்க அப்பம் கிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனா?* என்ற பகுதியிலும் காற்றப் புலப்படிமத்தைக் கண்டு தெளிய லாம். - . கொப்புலப் படிமங்கள் : தொடுவதால் நுகரக்கூடிய படிமங் கள் இவை இவற்றை ஆழ்வார்கள் பாசுரங்களில் காணலாம். f எ-டு: குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் கப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா!' (கோட்டுக் கால் கட்டில்-யானைத் தந்தத்தால் செய்த கட்டில், பஞ்ச சயனம்-அழகு, குளிர்ச்சி, மென்மை, மணம், i8. பாதிதாசன கவிதைகள்-முதல் தொகுதி 48. பெண்குழந்தைத் தாலாட்டு ' o - . . . - - 19. இசைய முது-தாலாட்டு. 20, திருல் 10 .