பக்கம்:பாட்டுத் திறன்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனிட்டுத்பா திறன் £g? இராம இலக்குமணர்கள் விசுவாமித்திரனுடன் மிதிலைநகர் வருங்கால் அங்ககர் மதிலின் மீதுள்ள கொடிகள் அசைவதைக் குறிப்பிடும் பாடல் இது, கொடிகள் அசைவது இயக்கப் புலப் படிமமாகும். 'கண்ணன் பாட்டில் பல இடங்களில் இவ்வகைப் படிமங் கள் அமைந்து பாடலின் சுவையைப் பன்மடங்கு உயர்த்து கின்றன. சேனைத் தலை கின்று போர்செய்யும் போதினில் தேர் நடத்திச் கொடுப்பான் (தோழன்-2) ஆட்டங்கள் காட்டியும் பாட்டுகள் பாடியும் ஆறுதல் செய்திடுவான் {#-4) பள்ளத்தி லேகெடு கானழுகுங் கெட்ட பாசியை யெற்றிவிடும்-பெரு வெள்ளத்தைப் போல. (ഒ്-5) தீயத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருங் தீமைகள் கொன்றிடுவான் (டிை-7} கல்ல நல்ல நதிகளுண்டு-அவை காடெங்கும் ஓடிவிளை யாடி வரும் காண் மெல்ல மெல்ல போயவைதாம்-விழும் விரிகடல்... (தாய-, இவண் காட்டப் பெற்ற தொடர்களிலும் பாடற் பகுதிகளிலும் இவ்வகைப் படிமங்கள் அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்க. பாவேந்தரின் பண்ணார் பாடல்களில் இவ்வகை உருக் காட்சிகளைக் காண்போம். படிகத்தைப் பாலாபிஷேகம் செய்து பார்ப்பது போல் அமுத வல்லி கண்ணிர் வெள்ளம் அடிசோர்தல் கண்டார்கள் அங்கிருந்தோர்' அமுத வல்லியியின் கண்ணிர் வெள்ளம் அவள் உடலெல்லாம் பாய்ந்து அவள் காலடி வரையில் ஒழுகி வழிவதைக் கண்டு நெகிழலாம். - 31, பாரதிதாசன் கதைகள்-முதற்தொகுதி-2 :பு சிக் கவி: