பக்கம்:பாட்டுத் திறன்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 பாட்டுத் திறன் ஆழி மழைக்கண்ணா: ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியங் தோளுடிைப் பற்பநாபன் கையில். ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் கின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம், உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய்." (கரவேல்-மறைக்காதே; ஆழி-கடல்; புக்கு-முகந்து; ஆர்த்து -ஆரவாரித்து; பாழி-பெருமை, ஆழி-சக்கரம்; அதிர்ந்துமுழங்கி) ஆயர்பாடிச் சிறுமியர் மழைத்தெய்வத்தை வேண்டுவதாக ஆண்டாள் அருளிய பாசுரம் இது, ஆழியுள் புகுதல், ஏறுதல், சார்ங்கம் உதைத்தல் இவை இயச்கப் புலப் படிமங்கள்; ஆழி ம ைழ க் கண் ண ன், ஊழிமுதல்வன்போல் மெய்கறுத்தல், ஆழிபோல் மின்னுதல்-இவைகட்புலப்படி)ங்கள்; ஆர்த்தல், அதிர்தல், சரமழை பெய்தல்-இவை செவிப்புலப் படிமங்கள்.இத் தகைய கலவைப் படிமக் காட்சியை இன்னொரு பாசுரத்திலும், காணலாம், ' தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கங் தாங்கக் கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து கோக்கத் தெண்திரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கு மாதோ." இது மருத நிலம் என்ற மன்னன் கொலு வீற்றிருக்கும் காட் சியைக் காட்டும், பாடலாகும் மயில்கள் ஆடுதல் இயக்கப்புலப் படிமம்; தாமரை விளக்கம் தாங்குதல், குவளை கண்விழித்து நோக்குதல், தெண்திரை எழினி காட்டுதல்-இவை கட்புலம் படிமங்கள்; கொண்டல் ஒலி த்தல்|வண்டுகள் இனிமையாகப் பாடு தல்-இவை செவிப்புலப் படிமங்கள்.இவைகலந்து கிற்கும்விலை யில் கவிதையதுபவம் கொடு முடியை எட்டும்படி செய்து விடு கின்றது. 87. திருப், 4. 38. டிெ.28, 89 டிெ.டிெ. தாட்டுப்.4