பக்கம்:பாட்டுத் திறன்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 30 அன்னங்கள் பொற்கமலத் தடத்தின் ஊர அளிமுரலக் கிளிமழலை அரற்றக் கேட்போர் கன்னங்கள் அமுதுற குயில்கள் பாடும் காவினத்து கறு, மலரின் சமழைத் தென்றல் பொன்னங்க மணிமடவார் மாட மீது புலவிசெயும் போதினிலே போந்து வீச வன்னங்கொள் வரைத்தாளார் மகிழ மையல்விழி தோற்றுவிக்கும் மாதா வண்மை நாடு.49 என்ற பாரதியின்"பாஞ்சாலி சபதப் பாடலில் அன்னங்கள் தடத் தின் ஊரல், தென்றல்வீசுதல் இவை இயக்க நிலைப்படிமங்கள், அளிமுரலுதல், கிளி மிழற்றுதல், குயில்கள் பாடுதல் இவை செவிப்புலப் படிமங்கள்; அன்னங்கள் பொற்கமலத் திருத்தல் அளிகிளி குயில்கள், காவினத்து கறுமலர்கள், பொன்னங்க மணி மடவார், வன்னங்கொள் வரைத்தோளார். இவை கட்புலப் படி மங்கள். இவிையாவும் கலந்து அமைந்து கவிதைக்குப் பொலிவூட் டுவதைப் பாடலைப் பன்முறை படித்துப் படிமங்களை மனத்திற் குக் கொணர்ந்து அநுபவிக்கும்போது தெளிவாக அறியலாம். அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்னகத்தில் கொண்ட ஒரு பெரும் புறத்தில் கூத்தாடுகின்றது காற்று, அது தென்றலாக உருவெடுப்பதை அடியிற் காணும் பாடற்பகுதி களில் காணலாம். பொதிகை மலை விட்டெழுந்து சங்தனத்தின் புதுமணத்தில் தோய்ந்து, பூந்தாது வளி கதிதழுவி அருவியின் தோள் உங்தித் தெற்கு கன்முத்துக் கடலலையின் உச்சி தோறும் சதிராடி, மூங்கிலிலே பண் எழுப்பித் தாழையெல்லாம் மடற்கத்தி சுழற்ற வைத்து முதிர்தெங்கின் இளம்பாளை முகம்சு வைத்து முத்துதிர்த்துத் தழிழகத்தின் வீதி கோக்கி அந்தியிலே இளமுல்லை. சிலிாக்கச் செக்கெல்லி அடிதொடரும் மடைப்புனலும் சிலிாக்க என்றன். சிந்தை உடல் அணு ஒவ்வொன்றும் சிலிர்க்கச் செல்வம் ஒன்று வரும்; அதன்பேர் தென்றற்காற்று.* இப்பாடற் பகுதிகளில் காற்றப்புலப் படிமம், கொப்புலப்படிமம் இயக்கநிலைப் படிமம், செவிப்புலப் படிமம், சுவைபுலப் படிமம் 40. பா. சா.: 1.17:117 #1- பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் பகுதி- 8.தென்றல்,