பக்கம்:பாட்டுத் திறன்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 பாட்டுத் திறன் ஆகியவை அமைத்துள்ள நேர்த்தி எண்ணி எண்ணி மகிழத் தக்கது. . கவிதையை ஒர் அழகிய அணங்காகக் கற்பனை செய்யும் பாடல்களில் இது ஒன்று தண்ணிலவும் அவள்முகமோ? தாரகைகள் நகையோ? தளிருடலைத் தொடும் உணர்வோ? கன்மணஞ்சேர் குளிரும் விண்ணிலம் கார்குழலோ? காணும் எழிலெல்லாம் மெல்லியின் வாய்க் கள் வெறியோ! நல்லி மலர்த் தேனின் வண்டின்ஒலி அன்னவளின் தண்டமிழ்த்தாய் மொழியோ வாழியஇங்கிவையெல்லாம் வாழிய எழுத வரும் கண்டெடுத்தேன் உயிர்ப்புதையல்! கவிதை அதோ வந்து விட்டாள் கண்டெழுத முடியாத கறுங்கவிதை அவளே!’ இதில் கட்புலப் படிமம், தொடுபுலப்படிமம்,காற்றப்புலப்படிமம் சுவைப்புலப் படிமம், செவிப்புலப் படிமம் ஆகிய ஐந்து வகைப் படிமங்களும் கலந்த நிலையை அநுபவித்து மகிழலாம். மெய்யுற வாய்சு வைக்க விழி அழ குண்ன மூக்கு வெய்ய சக்தனத்தோள் மோப்ப, விளை தமிழ் காது கேட்க ஐயன்பால் புலன்களில் ஐந்தால் அமிழ்தள்ள வேண்டும்.* இப்பாடற் பகுதியும் பழகிப் பஞ்சாமிர்தம்போல்' ஐவகைப் படி மங்களையும் கொண்டிலங்குகின்றது. x காம் உவமை, உருவகம் போன்ற அணிகளைக் கவிதை களில் கண்டு அதுபவிப்பதைப் போலவே மேனாட்டுத் திறனாய் வாளர் படிமங்கள்' என்ற ஒரு புதுக் கருத்தைக் கவிதைகளில் கண்டு அநுபவிக்கின்றனர். ஈண்டு ஆழ்வார்களின் பாசுரங்கள், கம்ப ராமாயணம், பாரதியார், பாரதிதாசனின் கவிதைப்படைப் புகள் இவற்றில் மட்டிலுமிருந்து எடுத்துக் காட்டுகள் காட்டப் பெற்றன.தமிழ் இலக்கியப் பூஞ்சோலையில் உள்ள பல அழகிய மலர்களையெல்லாம் இப்புதுக் கருத்தின் ஒளியில் கண்டு அது பவிக்கலாம்;அவற்றிலெல்லாம் கவிதையநுபவத்தைப் பெறலாம். 42. டிெ..முதத்தொகுதி-14 ಆಶ್ಲೆ తెతఐ. 48. குடும்ப விளக்கு-முதியோர் கர்தல்,