பக்கம்:பாட்டுத் திறன்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 . பாட்டுத் திறன் விட்டுப் போகின்றன. பிறகு மனம் மீண்டும் அப்பொருள் களைக் காண நேரிடுங்கால் அவை முன் அநுபவித்த சுகம் அல்லது துக்கம்-உணர்ச்சியையே தட்டி எழுப்புகின்றன. இவ்வாறு மனத்தில் செதுக்குண்டிருக்கும் உணர்ச்சியைத்தான் அறிஞர்கள் வாஸனை' என்று கூறுவர். வெளியில் பொருள் களைக் காணும் பொழுது உள்ளே உறங்கிக்கிடக்கும் அப் பொருள்களைப்பற்றிய வாஸனை மலர்கின்றது. அவ் வாஸனைக் கேற்றவாறு நாம் உலகப் பொருள்களை கல்லவை என்றும், தீயவை என்றும் கொள்ளுகின்றோம். எல்லாவற்றையும் இன்பமாக உணரும் சிலை மனத்திற்குக் கிட்டி விட்டால் அது பெறற்கரிய பேறாகும். அங்கிலை கொண்ட மனம் வாய்க்கப் பெற்றவனே கவிஞன். யாவற்றையும் ரஸ்மாய்க் கண்டு உணரும் உள்ளத்தையுடையவனே சிறந்த கவிஞன் என்பது அறிஞர் கருத்தாகும். இரச விளக்கம் : இரசம் என்பது என்ன? காவியத்தைப் படிப்பதால் உண்டாகும் இன்ப உணர்ச்சியே இரசமாகும். மனம் உணர்ச்சியால் பூரித்திருக்கும்பொழுது அதில் ஓர் ஒளி வீசும். அதுவே இன்பம்; அதுவே ஆன்ம ஒளி. ஆன்மா அங்குத்தான் பிரதிபலிக்கின்றது. அங்கிலையை அடைவதற்கு மனம் சலனமற் றிருக்கவேண்டும். அந்த அசைவற்ற கிலை மனத்திற்குப் பல விதங்களில் உண்டாகலாம். யோகியர் தம் மனத்தை வசப்படுத்தி கிலை கிறுத்திச் சமாதிநிலையில் ஆன்ம ஒளியைப் பெறு கின்றனர். உறக்கத்திலும் மனம் சோர்ந்து அசைவற்றுக் கிடக்கும் பொழுது அங்கும் ஆன்மா தோற்றமளிக்கின்றது; இன்பமும் தலைக்காட்டுகின்றது. காவியங்களைப் படித்து உணர்ச்சிப் பெருக்கால் மனம் பூரிக்கும் பொழுது ஆன்ம ஒளி வீசும்; மனத்திற்கும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். எனவே, எனவே, காவியத்தைப் படித்து அதில் மனத்தைச் செலுத்து கிறவர்களுக்குச் சுவையின் தன்மை தெளிவாகப் புலனாகும். சுவையின் இயல்பும் அஃது உண்டாகும் முறையும் : இனி, சுவையின் இயல்பினையும் அஃது உண்டாகும் முறையினையும் நோக்குவோம். மக்கள் உள்ளத்தில் ஒவ்வொருகால் எழும் உளவேறுபாடு பாவம் எனப்படும். பாவங்களுள் சில கிலை பெற்றிருக்கும்; பல சிறிதுநேரம் கின்று மறையும். தனக்கு ஒற்றுமையுடையனவும் வேற்றுமை யுடையனவுமாகிய பிற