பக்கம்:பாட்டுத் திறன்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 பாட்டுத் திறன் குரியவை; அவை சாத்விக பாவம் எனப்பெறும். கடைக்கண் ண்ால் நோக்குதல் முதலிய செய்கைகள் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவை. காதல் முதலிய ஸ்தாயி பாவங்களைத் துணைக் காரணமாய் கின்று வளர்க்கின்ற கலிவு, கினைவு, விரைவு முதலி யன சஞ்சாரிபாவம் எனப்பெறும். எ-டு: துஷ்யந்தனுக்குச் சகுந்தலையும், சகுந்தலைக்குத் துஷ்யந்தனும் காதலுக்கு ஆலம்பனம். அக்காதல் தென்றல், கிலா, சோலை முதலிய உத்திபன விபாவத்தால் எழுப்பப் பெற்று, கண்ணிர் வார்தல் கடைக்கண்ணோக்குதல் முதலிய காரியங்களால் அநுபவப்பட்டு, விரைவு நினைவு முதலிய சஞ் சாரி பாவங்களால் வளர்க்கப்பட்டு மனத்தில் நிலைபெறு கின்றது. இவ்வாறு தோன்றித் தெளிவாகி, வளர்ந்து வருகின்ற காதல் முதலிய பாவங்கட்கு நல்லறிஞர் உள்ளத்தில் உண் டாகும் பிரதி பிம்பமே ரசம் எனப்பெறும். தூய வெண்ணிறத் தவாகிய ஞாயிற்றின் கதிர்கள் செந்நிறக் கண்ணாடியில் படும் பொழுது அவற்றிற்குச் செங்கிறம் உண்டாதல் போன்று, கார ணம் முதலியவற்றிற்கும் காதல் முதலியவற்றிற்கும் பிரதி பலிக்கச் செய்யும் பொருளின் தன்மையை அனுசரித்துச் சில சிறப்பான வேறுபாடுகள் உண்டாகின்றன. அதனால் காரணம் முதலியவை விபாவம் முதலாய நிலையில், இன்ன மனிதர், இன்ன நேரம், இன்ன இடம் இவை போன்ற சிறப்பியல்புகளை விட்டுப் பொதுவாய வடிவில் அமைகின்றன. அவ்வாறே ஸ்தாயி பாவங்களுள் சோகம், இளிவரல் முதலிய மாறுபட்ட உளவேறு பாடுகளும் அனுகூல பாவங்களாய் அமைகின்றன. அதனானே, கருணம் (சோகத்தால் உண்டாவது), பீபத்ளலம் (இழிவரலால் உண்டாவது) முதலிய இரசங்களிலும் கமக்குச் சுவையும் ஈடு பாடும் உண்டாகின்றன. மகாகவி நீலகண்ட தீட்சிதர், கிர் வேதம், பயம், சோகம், ஜூகுப்ளை முதலியவைகளும் இலக் கியங்களில் இரசத்தன்மையன ஆகின்றன' என்று கூறியிருப்பது ஈண்டு அறியத்தக்கது. - நல்லறிவாளன் தன் தாய உள்ளத்தில் இந்த விபாவம் முதலியவைகளை மீட்டும் மீட்டும் கினைக்குஞ் செயலுக்குச் சுவைத்தல் (சர்வணம்) என்று பெயர். அவ்வாறு சுவைக்கும் கிலையில் கரும்பின் துண்டிலிருந்து இனிப்புச் சுவை உண்டா