பக்கம்:பாட்டுத் திறன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பாட்டுத் திறன் என்ற நற்றிணைப் பாட்டில் உள்ள வருணனை தலைவனது ஊரினை வருணிப்பதுபோல் அமைந்துள்ளது. தாமரையின் குளிர்ந்த மலரைத் தின்பதனை வெறுத்து விட்டுக், கழுநீர் மலரை மேய்ந்த எருமை கையிலே தடிகொண்ட வீரரைப்போல் செருக்கி நடந்து அண்மையில் குன்றுபோலக் குவிக் து கிடக்கும் வெள்ளியமணலின்மீது துயிலா கிற்கும் ஊரனே' என்றுவெளிப் படையாக ஊரை வருணிப்பது போல அமைந்திருப்பினும், இதில் உள்ளுறையாக அமைந்து கிடக்கும் கருத்து வேறு. தலைவியை மருவாது பரத்தையை மருவிய தலைவனுக்குத் தாமரையை வெறுத்துக் கழுநீரை மேய்ந்த எருமை உவமை. மேலும், தலைவன் பரத்தையின் வீட்டிலும் தங்காது சேரிப் பரத்தையின் மனையின் கண்ணே தங்கினான் என்பதும், எருமை கழுநீரை மேய்ந்த இடத்திலும் தங்காது, தாமரை இருக்கும் இடத்திற்கும் வாராது மணற்குன்றில் தங்கிற்று என்ற செயலை உவமை யாகக் கொண்டு விளக்கப் பெறுகின்றது. இவ்வாறு தலைவி பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனை நேர்முகமாக அவன் கடத்தையை இடித்துரைக்காது, உள்ளுறையால் நயமாக-உயர்ந்த பண்பாட்டுடன்-இடித்துரைக்கின்றாள். பாடலைப் படிக்கும் நாம் உள்ளுறை புலனாகத் தொடங்கியதும் கவிதையின்பத்தில் திளைக்கின்றோம். - இன்னோர் எடுத்துக்காட்டு : தமயந்தியின் இரண்டாம் சுயம் வரத்தின் பொருட்டு இருதுபர்ணன் குண்டினபுரத்திற்கு வரு கின்றான். வீமன் அவன் வருகையின் காரணத்தை உசாவும் முறையில், கன்னி கறுங்தேறல் மாந்திக் கமலத்தின் மன்னித் துயின்ற வரிவண்டு-பின்னையும்போய் நெய்தற் கவாவும் நெடுநாட! நீ யென்பால் எய்தற் கவாவியவாறென்?28 என வரும் வெண்பாவில் கன்னி...நெடுநாட! என்ற பகுதி இருதுபர்ணனின் நாட்டை வருணிப்பதாக அமைந்துள்ளது.புதிய நல்ல மணமுள்ள தேனைப் பருகித் தாமரை மலரில் துயின்ற வண்டு மறுபடியும் நெய்தல் மலரைச் சேர்வதற்கு விரும்பு கின்றது. அத்தகைய வண்டுகள் உள்ள காட்டை யுடையவன் 26. புகழேந்தி : நளவெண்பா-செய். 870,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/32&oldid=812720" இலிருந்து மீள்விக்கப்பட்டது