பக்கம்:பாட்டுத் திறன்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் - 母星盘 3. வீரத்திற்கு * * உற்சாகம். 4. ரெளத்திரத்திற்கு 秀う குரோதம். 5. ஹாஸ்யத்திற்கு 3巻 ஹாஸ்ம் (கை). 6. பயானகத்திற்கு * 3 பயம். ?. பீபத்லத்திற்கு $ 3 ஜாகுப்ளை) (அருவருப்பு). 8. அற்புதத்திற்கு 3 : விஸ்மயம் - (ஆச்சிரியம்) 9. சாங் தத்திற்கு . 穷多 கிர்வேதம் (வியப்பு). இங்கிலைபெற்ற பாவமே இரசமாகும். எடுத்துக்காட்டாக நகை (ஹாசம்) என்னும் பாவத்தினின்று ஹாஸ்யம் என்னும் சுவை தோன்றும். ஆயின்,ஆசிரியர் தொல்காப்பியனார் பாவத்திற் குரிய பெயரையே சுவைக்கும் கூறியுள்ளார். அஃது அமைதி பாதல் அரிது. இச் சுவைகளுள் கருணம் ஒன்றுதான் பல்வேறு இரசங் களாகப் பரிணமிக்கின்றது என்பாரும், அற்புத இரசம் ஒன்றே வேறுபல சுவையாகின்றது என்பாரும், சிருங்கார இரசம் ஒன்றே சிறந்தது என்பாரும் உளர். இதில் உண்மை இல்லாமல் இல்லை. பல வகையான நீர்களில் தோன்றும் சூரிய பிம்பம் போல், பல விதமான நிலைகளில் தோன்றும் ஆன்ம ஒளியாகிய இரசத்திற்கும் வேற்றுமை இல்லை. உணர்ச்சிப் பெருக்கால் மனம் பூரித்திருக்கும் பொழுது அதில் தோன்றும் ஒளிக்கு வேற்றுமை கிடையாது. அநுபவ நிலையை வைத்துப் பார்த்தால் இரசத்திற்கும் வேற்றுமை இல்லாமை புலனாகு ம். ஒற்றுமையில் வேற்றுமை : சுவைகளுக்குக் காரணமாக விருக் கும் உணர்ச்சிகள் ஒன்பதாக வகுக்கப் பெற்றுள்ளதைமேலே கூறினோம் அல்லவா? ஓர் உணர்ச்சியில் பிற உணர்ச்சிகள் கலக்காமல் இருப்பது அரிது; பிற உணர்ச்சிகளின் கூறுகள் அதில் இருக்கத்தான் செய்கின்றன. பூமியை எடுத்துக் கொண் டால் அதில் நீர், காற்று, கெருப்பு, ஆகாயம் என்னும் நான்கும் கலந்துதான் இருக்கும். மற்றவை இருந்த போதிலும், பூமியின் கூறு அதில் அதிகமாக இருப்பதால் அதைப் பூமி என்று வழங்கு கின்றோம். அவ்விதமே, நாம் சுவைகளின் வேறுபாட்டையும் உணர்தல் வேண்டும். பல இடையூறுகள் இருந்த போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் ஒரே நோக்கமாகத் துஷ்யக்