பக்கம்:பாட்டுத் திறன்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

814 பாட்டுத் திறன் இதனை இரசங்களின் மன்னன்' என்றும் பாராட்டுவர். காதல் இல்லாமல் கதை உண்டா?’ என்ற உலகமொழியையும் கேள்விப்படுகின்றோமன்றோ? இதற்கு மூலகாரணம், இலக்கி யங்களில் இச்சுவையைக் கவிஞர்கள் அளவுக்குமீறி வளர்த்திருப் பதுதான். சிருங்கார ரசத்திற்கு ஆலம்பனவிபாவம் (காரணம்) தலைவன், தலைவியர். தலைவனுக்குத் தலைவியும், தலை விக்குத் தலைவனும் விபாவம் என்று கொள்ளுதல் வேண்டும். அவருள் ஒருவருக்கு மற்றவருடைய உரு, உடை, அணி, மாலை முதலியனவும் கிலா, தென்றல், கடல் முதலியனவும் ஆணின்பின் ஆணேறு உடன் வருதலைக் காண்டல், யாழ், குழல் முதலிய வற்றின் ஒசையைக் கேட்டல் முதலியனவும் அவ்வுள்ளத் தெழுந்த காதலை மிகுவிப்பவை (உத்திபன விபாவம்) ஆகும். இவ்வுத்திபன விபாவம் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள முதற்பொருள், கருப் பொருள்கள் ஆகும். கருப்பொருள்களை வருணிக்குமிடத்துக் காதல் முதலியவற்றை வளர்க்கும் முறையில் வ்ருணித்தல் வேண்டும். - ககைவெண் டிங்களும் நார்மட லன்றிலும் தகைவெள்ளேற்றனற் றாழ்மணி யோசையும் பகைகொள் மாலையும் பையுள் செய் ஆம்பலும் புகையில் பொங்கழல் போற்சுடு கின்றவே : என்னும் செய்யுளில் கூறப்பெற்றுள்ள மாலைக்காலமும். திங்களும், அன்றிற்குரலும், ஆனேற்றின் மணியோசையும், ஆம்பற்குழலின் தீங்குரலும் காதலை மிகுவிப்பனவாதல் அறிதற்பாலது. சிருங்காரத்தின் வகை : சிருங்காரம் சம்போக சிருங்காரம், விப்ரலம்ப சிருங்காரம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பெற் றுள்ளது. முன்னது சேர்க்கையைப்பற்றிக் கூறுவது, பின்னது பிரிவை உரைப்பது-இவ்விரண்டு வகையோடும் தொடர்புடைய செய்திகளே, தொல்காப்பியத்தில் களவியல், கற்பியல் என்ற பகுதிகளில் கூறப்பெறுகின்றன. அவை இச்சுவையின் தொடர் புடையன என்று ஆசிரியர் கூறாவிடினும், அவர் அமைத்த முறை களும் செய்திகளும் இதனுள் அடங்குவனவாயின. சம்போக சிருங்காரம்: சம்போக சிருங்காரற்திற்குச் சிவக சிந்தாமணியிலுள்ள விமலையார் இலம்பகத்தின் ஒரு பகுதியை 8. சீவகசித்.1821,