பக்கம்:பாட்டுத் திறன்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 325 எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சீவகன் தன் தோழரோடு, நகர்ப்புறத்து வந்து தங்கி இராப்பொழுதைக் கழித்து,காலையில் செய்வன செய்து, அழகிய வடிவெடுத்து நகர்காணச் செல்லு கின்றான். அவனைக்காணும் கன்னியர், வேட்கை மிகுகின்றனர். சீவகன் அவ்வாறு செல்கையில் வணிக மாதொருத்தி தன் மாளிகையின்மேல் கின்று, கோதையும் மாலையும் பொங்க, முலைமேல் முத்துவடம் புடைப்ப, மணிக்குழை வில்வீச, பொன்னோலை மின்ன, கலாபமும் சிலம்பும் ஆர்ப்பப் பந்தாடு கின்றாள். அவள் ஐந்து பந்தைக் கையகத்துக் கொண்டு ஆடும் போழ்து, மாலையில் மறையும் பந்து கையிடத்த வாகின்றது; குழற்புறத்துச் செல்லும் பந்து முகத்தினிடத்த வாகின்றது; உச்சியிற் செல்லுவது மாலையில் மறைகின்றது. அவள் இப்பந்துகளை அடித்தற்கிடையே கோதை வேய்தல், குங்கும் மணிதல், நாற்பக்கமும் செல்லுதல் முதலியன சிகழ்த்துகின்றாள்; இவ்வாறு பக்தாடுகையில் ஒரு பந்து மேலே பொங்கி, வீதியிற் செல்லும் சீவகன்முன் வீழ்கின்றது. உடனே - வீழ்ந்தபந்தின் மேல்விரைந்து மின்னனுண் ணுசுப்பினாள் சூழ்ந்தகாசு தோன்றவங் துகில்நெகிழ்ந்து பூங்குழல் தாழ்ந்துகோதை பொங்கிவீழ்ந்து வெம்முலைகள் தைவரப் போழ்ந்தகன்ற கண்ணிவந்து பூங்கொடியின் நோக்கினாள் : நோக்கினவள் சீவகனைக் கண்டதும் இமைக்காது நோக்கி, நானும் கிறையும் சாயலும் கவினும் வளையும் இழந்து, காம நோயின் இயல்பினை அறிந்தாளாய். வாடி. கடல்போன்ற காமம் கனற்ற வருந்தி சிற்கின்றாள். அவளைக் கண்ட சீவகன் அவள் நோக்கினை மட்டும் நோக்குகின்றான். காமநோய்க் கனல் தலைக் கொள்ளுகின்றது. அத்தீச்சுட கடக்கலாற்றானாய் அடுத்த கடையில் தங்கியிருந்து அவளது உருவினையும் கோக்கினையும் எண்ணிக் கவல்கின்றான். - - இப்பகுதி சிருங்கார ரசம் உடையது. விமலை என்னும் பெயருடைய அவ்வணிக மகளும் சீவகனும் ஆலம்பன விபாவம். 9. சீவகசித்.1958,