பக்கம்:பாட்டுத் திறன்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

816 பாட்டுத் திறன் விமலையின உருவும், அல்குற் சூழ்ந்துகிடந்த காசும், துகில் நெகிழிக் கூந்தலிலிருந்த மாலை தாழ்ந்து முலைமேல் தடவ, கின்று கோக்கிய நோக்கும் சீவகனுக்கு உத்திபன விபாவம், சீவகனது மன்மத ஆகாரமும் அவன் மறித்து கோக்கிய நோக்கமும் விமலைக்கு உத்திபன விபாவம். இருவருக்குக் தோன்றிய காதல் என்னும் ஸ்தாபி பாவத்தை ஆசிரியர்வளர்த்து இன்புறுத்தியுள்ள பாடல்கள் பன்முறை படித்து மகிழ்தற்குரிய வை. இவ்வாறு உத்திபன விபாவத்தாலும் ஸஞ்சாரி பாவத் தாலும் காதல் (ரதி) என்னு ஸ்தாயி பாவம் வளர்ச்சியடை கின்றது. பின்னர் வணிகன் தன் மகளை மணந்துகொள்ளுமாறு சிவகனை வேண்டுகின்றான்; அவனும் உடன்பாடு தெரிவிக் கின்றான். இருவருக்கும் திருமணம் நடைபெறுகின்றது. கட்டி லேறிய காமரு காளையும் மட்டு வாயவிழ் மாமலர்க் கோதையும் விட்டு நீங்குதல் இன்மையின் வீவிலார் ஒட்டி யிருடம் போருயி ராயினார். - கில்வு வெண்கதிர் நீர்மையைப் பூந்துகில் கலவங் கண்புதை யாது கனற்றலின் உலகம் மூன்று முறுவிலைத் தென்பவே புலவு வேற்கண்ணி னாள்முலைப் போகமே." என்னும் தொடக்கத்துச் செய்யுட்களால் சிருங்கார இரசம் தொனித்தலை அறியலாம். விப்ரலம்பம் : விப்ரலம்ப சிருங்காரத்திற்கு இராமாயணத்தி அலுள்ள ஒரு பகுதியை எடுத்துக்காட்டுவோம். விப்ரலம்ப சிருங் காரமே சிறப்புடையது. விப்ாலம்பமாவது, பிரிவு. புணர்ச்சி யின்பத்திலுள்ள பற்றினால் உயிர்வைத்துக் கொண்டிருக்கும் கிலைமை விப்ரலம்ப சிருங்காரம் ஆகும். இராமாயணத்தில் சிறை யிருக்த செல்வி, பொறையிருந் தாற்றிஎன் உயிரும் போற்றினேன் அறையிருங் கழலவற் காணு மாசையால்; கிறையிரும் பல்பகல் கிருதர் நீள்கர்ச் சிறையிருந் தேனையப் புனிதன் தீண்டுமோ?! 10. சீவகசித்.1981. 1982. 14. கம்ப - சுந்த ச - உருக்காட் 11,