பக்கம்:பாட்டுத் திறன்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器芷8 பாட்டுத் திறன் வுரையைப் பின்பற்றி ந ற்றிணை உரையாசிரியர் எழுதியிருக் கும் சுவைபற்றிய குறிப்புகளும் அமைவுடையனவாகா என்பது சொல்லாமலே போதரும். தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் ஆங்கவை ஒரு பாலாக' என்ற நூற்பாவில் கூறப்பெற்றுள்ள முப்பத்தி ரண்டு மெய்ப்பாடுகளும் சஞ்சாரி பாவங்களாகும். அதன் பின்னர் *புகுமுகம் புரிதல்' என்னும் நூற்பா தொடங்கிக் கூறப் பெறும் ஆறு சிலைகளும் (அவத்தைகளும்) தலைவியின் காத லை அறிதற்குரிய குறிப்புகள் (அது ராக குசகங்கள்) ஆகும். இவற்றுள் பலவும் வாத்ஸ்யாயனத்தில் வேட்கை குறிப்புகளாகச் அநுராக ச்சகங்களாகக் கூறப்பெற்றுள்ளன. பிறகு'இன்பத்தை .ெ வறு த் த ல் முதல் மூன்று நூற்பாக் களில் கூறப்பெற்றுள்ள செய்கிகளுட் பல சஞ்சாரி பாவங்களா கும்; சில வேட்கைக் குறிப்புக்களாகும். பசலைபாய்தல் என்பது சாத்விக்க பாவமாகும். பக்திப் பாடல்கள்: பக்திரஸப் பாடல்களும் சிருங்காரத்தில் அடங்கும் என்று மேலே கூறினோம் அன்றோ? தமிழ்மொழி யில் பக்திப் பாடல்களுக்குக் குறையே இல்லை. பக்திப் பெருக் கில் திளைத்த நாயன்மார்கழும் ஆழ்வார்களும் எண்ணற்ற தோத்திரப்பாக்களை அருளியுள்ளனர். இவை கவிதை நயமும் இசை ஏற்றமும் பொருள் தெளிவும் பொருந்திக் கல் கெஞ்சத் தையும் உருகச் செய்யும் ஆற்றல் பெற்றனவாய்த் திகழ்கின்றன. சமணர்களும் பெளத்தர்களும் தாம் இயற்றிய காவியங்களில் பக்திச் சுவை ததும்பும் பாடல்களைப் பாடியுள்ளனர். பிற்காலத் தில் தோன்றிய தாயுமான அடிகளும் இராமலிங்கவள்ளலும் பல பக்திப் பாடல்களை அருளியுள்ளனர். கிறிஸ்தவப் பெரியார் களும் முகம்மதியக் கவிஞர்களும் தத்தம் சமயங்களைக் குறித்து ஆண்டவன் மீதும் பல பக்திப் பாடல்களை கல்கியுள்ளனர். திருநாவுக்கரசர், கம்மாழ்வார், மணிவாசகர், இராமலிங்க அடி கள் போன்ற ஒரு சில பெரியார்கள் அகப்பொருள் நூல்களில் காணப்பெறும் துறைகளை அமைத்து உலகில் ஒருவன் ஒருத்தி பால் நிகழும் சிறிதாகிய காதல் இன்பத்தை முன்னிலையாக வைத்துக் கொண்டு இறைவனை உயிர்கள்கூடி அனுபவிக்கும் பேரின்பத்தை உள்ளுறையாகக் கொண்டு பாடல்களைப் பாடி 12. சம் 12. 13. சம் -16-18. 14, காத் 22