பக்கம்:பாட்டுத் திறன்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 338 யும் பெற்றிருப்பதால், அவை படிப்போரின் வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவனவாக உள்ளன. பேரிலக்கியங்களிலிருந்து சிற்றிலக்கியங்கள் வரை இப்பண்பு ஊடுருவியிருப்பதை எளிதில் அறியலாம். அறங் கூறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்ட திருக்குறளை வெறும் நீதிநூல் என்று மட்டும் கொள்ளுதல் கூடாது. காளென ஒன்றுபோல் காட்டி உயிாரும வாளது உணர்வார்ப் பெறின்" கன்றாங்கால் கல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்" அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும் பிற்பயக்கும் கற்பா லவை' இந்த மூன்று குறள் மணிகளிலும் கூறப்பெறும் உண்மைப் பொருள்கள் எவ்வளவு ஆழமாள்வை? இவற்றில் கவிதைக்குரிய இயல்பு ஒரு சிறிதும் கெடாதிருப்பதை அறிக. இங்ங்னமே, நூலிலுள்ள குறட்பாக்கள் அனைத்தும் திேயை உணர்த்துவ துடன் கவிதைக்குரிய எல்லா இயல்புகளுடனும் சிறந்து விளங்கு கின்றன. கற்பனை, அநுபவம், உணர்ச்சி ஆகியவற்றில் அவை தோய்ந்து சிற்பதால், அவை உயர்ந்த கவிதை நிலையைப் பெற் றுத் திகழ்கின்றன. கவிதையின் தலைமைப் பண்பு: கவிதையின் தலைமைப் பண்பு அஃது உணர்த்தும் உண்மையில்தான் உள்ளது. மனித அதுபவத்திலும் இயற்கையிலும் நாம் சாதாரணமாகக் காணாத புலனுணர் ஆற்றலுடைய அழகுகளையும் ஆழ்ந்த உண்மை களையும் அது காட்டுகின்றது. நம்மில் ஒரு சிலருக்குக் கவிதை யுணர்வும் உட்காட்சியும் (insight) ஓரளவு அமைந்துள்ளன. ஆனால், இவர்களுள் பெரும்பாலோரிடம் இத்தகைய கவிதைத் திறன் சாதாரண வாழ்க்கையின் இருப்பு நில்ைகளால் நெருக் குண் டு, அன்றாட வாழ்க்கையின் கூறுகளாகவுள்ள உலோகாய தக்கவர்ச்சிகளால் குன்றச் செய்யப்பெற்று, சில சமயம் கனவு னிேலயிலும் அல்லது கனவிலா நிலையிலும் நசுக்கப் பெறுகின் றது. ஆனால், உண்மைக் கவிஞனிடம் உலகப் பொருள்களில் அழகினையும், ஆழ்ந்த உண்மையினையும் காணும்திறன் ஈடு எடுப்பற்ற அளவிலுள்ளது. அன்றியும், தான் காண்பவற்றை 6. குறள் 384. ?. குறள் -379. 8. குறள் .659,