பக்கம்:பாட்டுத் திறன்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 - பாட்டுத் திறன் யும் கேட்பவற்றையும் தெளிவாக வெளியிட்டு விளக்கம் கூறும் திறனும் அமைந்து கிடக்கின்றது. இவ் விளக்கத்தைப் படிக்கும் நம்முடைய கற்பனையும் ஒத்துணர்ச்சியும் துடிப்புப்பெற்று அவற்றை அக்கவிஞனுடன் சேர்ந்து காணவும் உணரவும்: செய்து விடுகின்றது. இவ்விடத்தில் கோலரிட்ஜ் என்ற ஓர் ஆங் கிலப் பெரியார் கவிஞனைப் பற்றிக் கூறுவதைத் திரும்பக் கூறு வது மிகவும் பொருத்தமாகும். அவர் கூறுவதாவது: , உலக வாழ்வில் பழக்கவழக்கங்களின் காரணமாகவும், உலோகாயத் தின் காரணமாகவும் உறங்கிக் கிடக்கும் நம் கவனத்தைக் கவிஞன் எழுப்பி அதனை உலகப் பொருள்களில் உறைந்து கிடக்கும் அழகினைக் காணக் செய்கின்றான்.காம் அப்பொருள் களுடன் நெருங்கிப் பழகுவதாலும்' மண்ணாசை பொன்னா சை காரணத்தாலும், என்றுமே வற்றாத அவ்வழகுக் கருவூ லத்தைக் கண்ணிருந்தும் பார்க்க முடிகின்றதில்லை; காதிருந்தும் கேட்க முடிகின்றதில்லை; உள்ளம் இருந்தும் உணரவும், புரிந்து கொள்ளவும் முடிகின்றதில்லை; இதனாற்றான்பிரெள னிங் என்பார், கவிஞ களைக் காணச் செய்பவர்கள் ( make ers see) என்றும், கார்லைல் என்பார் ஆண்டவனின் அகிலத் தில் தெய்வீகத் தன்மையுள்ள விளங்கப் புதிர்களையும், ஆழ்ந்து நோக்க வல்லவர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளனர். இக்காரணத்தைக் கொண்டே ஒரு சமயம் ஆர்னால்ட் உலகின் வியத்தகு காட்சிகளையும் புதுமையான நிகழ்ச்சிகளையும் காண வல்ல ஞானி' என வொர்ட்ஸ்வொர்த்தைக் கூறியதைப் போல வே, நாமும் ஒவ்வோர் உண்மையான கவிஞனையும் புகழ்ந்து கூறலாம். எனவே, கவிதை நமக்குக் கவிஞனின் உள்நோக் குடன் காமாகவே வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கிப் பொருளு ரைக் கற்பிக்கின்றது; நம்முடைய பார்வையையும் ஒத்துணர்ச்சி யையும் உரம்பெறச் செய்கின்றது. இவ்வாறாக அது கம்மிடம் மறைந்து கிடக்கும் கவிதைப் பண்பினையும் வளர்க்கின்றது. உண்மை உணர்த்தும் கவிதைகள்: சிறந்த கவிதைகள் யாவும் கற்பனை, அதுபவம் என்ற இரண்டு கூறுகளும் கலந்த உண் மைகளைக் கொண்ட அழகு வடிவான கலைப்பிண்டங்களாகப் பொலிவுறும். பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பொறுத்த வரை, புறநானூற்றில் இத்த கைய அறங்கூறும் கவிதைகள் பல 9 Hudson w.H. 4. An Introduction to the study of Literature p. 94. . . . . . - - . . . . .