பக்கம்:பாட்டுத் திறன்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

826 பாட்டுத் திறன் கல்லது செய்தல் ஆற்றி ராயினும் அல்லது செய்தல் ஒம்புமின்: அதுதான் எல்லாரும் உவப்ப தன்றியும் கல்லாற்றுப் படுஉ கெறியுமா ரதுவே ' என்பன போன்ற பாடற் பகுதிகள் இவ்வுலகம் உள்ளளவும் மன்பதைக்கு அறிவுகொளுத்தி சிற்கும் பொய்யா மொழிகளாகப் பொலிவுறும். யோசிக்கும் வேளையில் பசி திர உண்பதும் உறங்குவதுமாக முடியும் வாழ்க்கை நிலையிலிருந்து கவிதையை நோக்கினால் கவிஞன் கூறும் உண்மையை உணர இயலாது. கவிஞன் பேசும் உண்மைகள் யாவும் குறிக்கோள் நிலையைப் பற்றியவை; இருப்பதைப்பற்றிப் பேசாமல் இருக்க வேண்டிய வற்றைப்பற்றிப் பேசுபவை. உலக வாழ்வைப் பேசினாலும் அவை அதில் காம் கண்டும் காணாத புதுமைகளையே எடுத் துரைக்கின்றன. இவ்விடத்தில் சில மேனாட்டு அறிஞர்களின் கருத்துகளை எடுத்துரைப்பது மிகவும் பொருத்தமாகும். ஒப்பற்ற மெய்ப்பொருளறிஞனாக இல்லாத ஒருவன் என்றுமே சிறந்த கவிஞனாக இருந்ததில்லை' என்று கோலரிட்ஜ் என்ற கவிஞர் கூறியுள்ளார். எமர்சன் என்ற பேரறிஞரும், சிறந்த கவிஞர் எனப்படுவோர் அவர் பிறர் மனத்தைத் தூண்டக் கூடிய மன விலையைக் கொண்டே முடிவு செய்யப்பெறுவர்' என்று உரைத்துள்ளார் இங்ங்னமே ஆர்னால், என்ற திறனாய்வாளரும், 'கல்லொழுக்கத் திற்கு முரணான கருத்தினைத் தரும் எந்தக் கவிதையும் வாழ் வுக்கு எதிராகச் செய்யப் பெற்ற புரட்சியாகும்; கல்லொழுக்கத் இல் கருத்தில்லாக் கவிதை வாழ்விலும் கருத்தில்லாததாகும்' என்று கருதுவர். எனவே, கவிதை உயர்ந்த பீடத்தினின்றே பேசவேண்டும் என்றாகின்றது. 18. புறம்-195. 17. No man was ever yet a great poet without being at the same time a profound philosopher - Biographia Literaria chap. xva 18. The great poets are judged by the frame of mind they induce Emerson: Preface to Parnassus. - 19. A. poey of revolt against moral ideas is a poetry of - revolt againts life; a poetry of indifference towards moral ideas is a poetry of indifference tolife- M. Arnold : M, Essays in criticism p 144, - .