பக்கம்:பாட்டுத் திறன்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்கூறியவற்றிலிருந்து கவிதை வாழ்வுடன் இணைந்த உறவுகளைப் பற்றியே பேசுகின்றது என்றும், அது நம் எல்லா மனநிலைகட்கும் முறையீடு செய்கின்றது என்றும் அறி கின்றோம். எந்தப் பாருளாக இருந்தாலும் அப்பொருளைக் கொண்டு தக்க முறையில் கவிதை வடிக்கப்பெற்றால் அது கவிதையழகினையும் உயர்ந்த குறிக்கோளையும் தரும் என் பதற்கு ஐயமில்லை. அது கூறும் முறையிலும் புதிய பொரு ளையே புலப்படுத்தி கிற்கும். - உண்ட வெறியில் முன்னொரு நாள் உண்ட கலத்தை உடைத்தெறிந்தேன் துண்டு துண்டாய்ப் போனகலம் - துணிந்து மெல்ல எனைகோக்கிப் "பண்டு யானும் உன் வாழ்வைப் பாரில் அடைந்தேன் நீயுமெனக்(கு) அண்டும் இந்த வாழ்வை இனி - அடைவாய் உண்மை’ என்றதடா ?” என்ற கவிமணியின் கவிதையிலுள்ள உண்மையை நோக்கின் இது பெறப்படும். இதிலிருந்து கவிஞர்கள் யாவரும் பெருமைக் குரிய நிபந்தனைகளை கிறைவேற்றுவதற்காக அறம் உரைக்கும் நோக்கத்துடன் கவிதை புனையவேண்டும் என்பது நம் கருத் தன்று; சதா வாழ்விற்குரிய கருத்துகளையே உணர்த்த வேண்டு மென்பதும் நம் கொள்கையன்று. பிரசாரகனது வேலைக்கும் கவிஞனுடைய வேலைக்கும் வேறுபாடுள்ளது; நாம் இரண்டை யும் வைத்துக் குழப்பவேண்டியதில்லை. பிரசாரகன் குறிப்பு களைத் தந்து வழிகாட்டுவான்; கவிஞனோ நமக்குக் கிளர்ச்சி யூட்டிப் புத்துணர்ச்சி தருவான்; அகத் தெழுச்சியைத் தாண்டி, புது ஆற்றலைத் தந்து, மகிழ்ச்சி யூட்டுவான். அறம் உரைத்தலே கவிதையில் வருதல் கூடாது என்று கருதும் தீவிரவாதிகளுக் காகவே நாம் இவ்வளவு கூற வேண்டியதாயிற்று. முதலில் மெய்ப்பொருள், அதிலிருந்து தோன்றும் கவிதை பிறகு' என்ற பிரெளனிங் என்பார் கூற்றும், “ஏதோ ஒரு வழியில் மெய்ப் பொருளினை உணர்த்தாத எந்தக் கவிதையும் அதைப் புனைந்தவருக்கு என்னை மரியாதைதரச் செய்வதில்லை' என்ற லாவெலின் கூற்றும் ஈண்டுச் சிந்தித்தற்குரியவை.2! 20. கவிமணி : உமார்க்கய்யாம் பாடல்கள் பா 87 (மலரும் மால்ை யும்) 21 Hudson W. H. : An Introduction to the Study of Literature-P.91,