பக்கம்:பாட்டுத் திறன்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 329 அடைகின்றது. கவிஞன் இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டு கவிதையைப் படைக்க முடியாது; அப்படிப் படைக்க முயன்றா லும் அக்கவிதை தான் விரும்பியபடி அமையாது. ஆனால், தான் பெற்ற விழுமிய உணர்ச்சியை-அநுபவத்தைப்-பிறரும் பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டிலும் கவிஞனிடம் இருந்தால் கவிதை தானாகக் கவிஞனின் விருப்பம் போல் நன்கு அமைந்து விடும். இயற்கைப்பொருள்கள் இன்பமயமா ன சமாதியில்அடங்கிக் கிடக்கின்றன.அந்த அமைதி நிலையைக்கலைக்காமல் அதனுடன் கலந்து கொள்ளும் இயல்புடையவனே கவிஞன். அவன் இயற் கையோடு பழகும்-தோய்ந்து கிற்கும்-அநுபவம் வாய்ந்தவன். இயற்கையுடன் அவன் ஒன்றி கிற்கும் கி லையே தனி. உறங்கும் குழந்தையைத் தாய் அணைவதைக் கண்டு ள்ளோம் அன்றோ? தாய் குழந்தையை மார்போடு சேர்த்தே தழுவிக் கொள்வாள். என்றாலும், அவ்வாறு அணைவதில் குழந்தையின் துயில்கெடு. வதில்லை; அடுத்த கணத்தில் அவளும் தன்னைiமறந்து உறங்கி விடுவாள். அவ்விதமே கவிஞனும் இயற்கையை அதன் இன்ப அமைதி கலையாமல்தழுவுவான். தன்னையும் உடனே மறந்து விடுவான்; இன்பப்பெருக்கில் மிதப்பான். அதிலிருந்துவெளிவந்த வுடன் இன்ப வெறிபிடித்தவன்போல் சில சமயம் பாடுவான். அவன் அநுபவித்த இன்பப் பெருக்கில் ஒன்றிரண்டு திவலைகள் அவன் பாடிய கவிதையில் அமைகின்றன. அதைப்பார்த்தே நாம் உயர்ந்த கவிதை என்று உள்ளம் பூரிக்கக் கொண்டாடு கின்றோம். வால்மீகியின் உள்ளம் இரசப்பெருக்கால் பூரித் திருக்கும்பொழுது இராமாயணத்தின் மூல சுலோகம் பிறந்த தாக வடமொழி வரலாறு கூறும். இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்த வடமொழி வாணர் கள் தலைவன் ஏவலாளர்க்குக் கூறுதல் போன்றவை அறநூல் கள் என்றும், கண்பர் ஒருவருக்கொருவர் கூறும் முறையில் அமைந்தவை புராணங்கள் என்றும், கணவனுக்கு மனைவி உரைப்பது போன்றவை காவியங்கள் என்றும் ஒருவகைப் பாகுபாடு செய்துள்ளனர். இல்வாழ்க்கையில் சொற்களைவிட உள்ளத்து உணர்ச்சிகளே ஆற்றல் மிக்கவை என்பதும், சொற் களால் உணர்த்துவதைவிடக் குறிப்பால் உணர்த்துவதே மிகுதி என்பதும் நாம் அறிந்தவை. இக்காரணத்தால்தான் ஒரு சில வரிகளாலான அகத்துறைச் சங்கப்பாடல்கள் உணர்ச்சியைக்