பக்கம்:பாட்டுத் திறன்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 பாட்டுத் திறன் என்று தொடங்கி யாக்கை, செல்வம், இளமை முதலியவற்றின் கிலையைம்ை விளங்கக் கூறி, 'வையங் காவல் பூண்டகின் கல்யாண்டு ஐயைங் திரட்டி சென்றதன் பின்னும் அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும் மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை' 'விண்ணோர் உருவின் எய்திய கல்லுயிர் மண்ணோர் உருவின் மரிக்கினும் மரிக்கும்; மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர் மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்: ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக் கூடிய கோலத்து ஒருங்குகின்றியலாது; செய்வினை வழித்தாய் உயிர்செலும் என்பது பொய்யில் காட்சியோர் பொருளுரை, ஆதலின் 28 நீ பெரிய அறக்கள வேள்வி செய்ய வேண்டும்; நாளைச் செய்குவம் அறம்' எனின் இன்றே கேள்விக ல்லுயிர் நீங்கினும் நீங்கும்; இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை'80 என்று கூறி முடிக்கின்றான்.செங்குட்டுவனும் அந்த அறவுறைப் படி வேள்விசெய்கின்றான்.இப்பகுதியிண்ைப்படிப்போர் மனமும் அவர்களையறியாது நிலையாமை உண்ர்வில் பதிகின்றது. இங் வனமே மணிமேகலை, சிந்தாமணி, வில்லிபாரதம் போன்ற காவி யங்கள் வாழ்க்கையின் பல்வேறு உண்மைகளை மிக நயம்பட இனிது உரைக்கின்றன. சங்க இலக்கியங்கள் உணர்த்துவது: வாழ்க்கையின் பல்வேறு உண்மைகளைப் புறநானூறு உணர்த்துவதை மேலே கண் டோம். மேலும் சிலவற்றைக் காண்போம். தமிழ் இலக்கியத்தில் உள்ள சிறந்த கவிதைகளில் ஒன்று மதுரைக் காஞ்சி' என்பது: பத்துப் பாட்டில் இது ஒன்று. இது தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார். பாடியது. இப்பாண்டியன் உலகத்து இன்பமாகிய மனையாள் 28. டிெ-வரி 129-182. 29. ഐ.-ഖ ി 159-188. 30. டிெ வரி 179-182.