பக்கம்:பாட்டுத் திறன்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் శ్రీః பிறந்த பருவத்தளாய விடத்து உன்னிடம் வந்து இரக்கும்போது நீ சிறிதும் இரங்கவில்லையே” என்று கூறி விலகியலைப் புலப் படுத்துகின்றாள் தலைவனுக்கு. வெம்மையுடைய சுரத்தைக் கூறும்போது கவிஞன், வாழ்க்கையின் பல உண்மைகளைக் கலந்து தருகின்றான்; அவன் உவமைகளின் வாயிலாகவே பல அரிய பொருள்களைப் பெறவைக்கின்றான். 'வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச் சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு கிழலின்றி யார்கண்ணும் இகந்துசெய் திசைகெட்டான் இறுதிபோல் வேரோடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலின் அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள்வெஃகிக் கொலையஞ்சா வினைவரால் கோல்கோடி அவனிழல் உலகுபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம் என்ற கவிதையை யதுகுல காம்போதி இராகத்தில் பாடி அநுப விக்கும்போது பாலையின் வெம்மையையும் கவிஞன் இன்பம் பயக்குமாறு செய்து விட்டதை அறிகின்றோம். பாட்டில் உள்ளம் தோய்ந்து கிற்கும்போது திேகளும் மனத்தில் ஆழ்ந்து பதிகின்றன. வறியவனுக்கு இளமையாற் பயனொன்றுமில்லை என்பதையும், அறிவில்லாதவனிடம் உள்ள செல்வம் பிறர்க்குப் பயன் படாது என்பதையும், அறத்தை மீறி நடந்தவன் புகழ் கெடும் என்பதையும் கவிஞன் இடத்தை யொட்டி நயம்படக் கூறியிருத்தலைக் காண்க. சுரத்தின் வெம்மையைக் காட்டும் போதே தியமைச்சர் சொற்கேட்டுக் கெட்டறியும் அரசனையும் புலப்படுத்தும்போது நமக்கு அளவிலா இன்பம் பயக்கின்றது. பொருளுடையவர்கள் அறிஞர்கட்கு வேண்டிய சமயம் உதவாததால் எத்தனையோ அருமைத்திறம் வாய்ந்தவர்கள் உளம் மெலிந்து வீணாய் விடுகின்றனர். பொருளுடையவர்களும் உள்ளம்விரிவுபடாது கூம்பி வீணாய் விடுகின்றனர். இப்படி இருதிறத்தாரும் மங்கிக் குன்றி விட்டால் உலக வாழ்க்கையும் இனிது நடை பெறாது போய் விடுமன்றோ? மாலைக்காலத்தை லருணிக்கு முகத்தான் நல்லந்துவனார், 83. பாலைக்கலி-10,