பக்கம்:பாட்டுத் திறன்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் பகுதி : புதுக்கவிதைத் திறன் இன்றைய இலக்கிய உலகில் புதுக்கவிதை ஒரு முக்கிய இடத் தைப் பெற்றுள்ளது என்பதை மறுத்தற்கில்லை. பலர் இதனை அநுபவித்து மகிழ்கின்றனர். இப்பகுதியில் புதுக்கவிதை இன்ன தென்பது ஒரளவு விளக்கம் பெறுகின்றது. உள்ளடக்கம் ஆகி யவை புதுக்கவிதையின் இன்றியமையாத கூறுகளாக அமைங் துள்ளமை எடுத்துக்காட்டப் பெறுகின்றன.மார்க்சியப் பாணியில் எழுந்துள்ள கவிதைகளும் தனிமனிதத்வ நோக்கில் அமைக் துள்ள கவிதைகளும் விளக்கம் அடைகின்றன. நகைச்சுவை, கிண்டல், எள்ளல் பற்றிய கவிதைகளும் இங்கு இடம் பிடித்துக் கொண்டன. மரபுக் கவிதையின் முக்கிய கூறுகளான காதல் உணர்வும் முருகுணர்வும் புதுக்கவிதையின் நோக்கில் புதுக் போக்குடன் அமைந்திருப்பதையும் இப்பகுதியில் கண்டு மகிழ லாம். படிமக்கோட்பாடு, குறியீட்டியல், மீமெய்ம்மையியல் கனவோடை-இவை நான்கும் இவண் விளக்கம் அடைகின்றன.