பக்கம்:பாட்டுத் திறன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 23 (அரக்குண்தாமரை-செங்கிறத்தைக்கொண்ட தாமரைப்பூ: விருத்தி-சீவிதம், சீவிப்பதற்காக விட்ட கிலம்; வெரீஇக் கொலோ-பயத்தை அடைந்தோ, குரல் கொடாது-ஒலித்து ஆரவாரம் செய்யாமல்; குறைந்தது-ஒலியடங்கியது.) மாதர்கள் அழுது சிவந்த கண்மலரின் அஞ்சனத்தையும் மையையும் விலக்குதலால் தமக்கும் ஏதம் வரும்ென்று வெருவியோ அன்றிப் பதுமை வருந்தினாள் என்றோ மேகலை அசைந்து ஆரவாரியாமல் ஒசையடங்கியதாக ஆசிரியர் (தேவர்) காரணம் கற்பித்துள்ளார். ஆகலின், பாட்டின் பொருள் முடிந்து விடுகின்றது. இதில், மெய்யசையாமல் அவசமானது (பரவச மானது) என்பது இறைச்சிப்பொருள். மேலே கூறியபடி பதுமையார் அங்கிங்குப் போகாமல், அசையாமல் ஒர் இடத்தில் இருந்துவிட்டாள்; இதனால் மேகலை அசைந்திலது' என்பது தொனிப்பொருள் என்பதை அறிக. வேறுவகையிலும் குறிப்பு : உள்ளுறையுவமம், இறைச்சி போன்றவற்றைத் தவிர வேறுவகையிலும் குறிப்புப் பொருள்கள் கவிதைகளில் காண ப் பெறு கி ன் ற ன. எடுத்துக்காட்டாக நற்றிணையில் ஒரு பாடல். அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல் எறிதிரை கொழி இய எக்கர் வெறிகொள ஆடுவரி யலவன் ஓடுவயின் ஆற்றாது அசை.இ உள்ளொழிந்த வசை தீர் குறுமகட்கு உயவினன் சென்றுயான் உள்நோய் உரைப்ப மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறுமலர் ஞாழல் அம்சினைத் தாழ்இணர் கொழுதி முறிதிமிர்ந்து உதிர்த்த கையள் அறிவு அஞர் உறுவி ஆய்மட நிலையே??? இதில் தலைவியைப் பிரிந்து சென்று வினை முடித்து மீண்டு வரும் தலைவன் தலைவியை விரைந்து சென்று காணும் விருப் புடையனாய், அதற்கேற்பத் தன் தேரை விரைவிற் கடவுமாறு பாகனுக்கு அறிவுறுத்துகின்றான். இப்பாடலின்கண் ஆடுவரி...குறுமகள்' என்பதனால் தலைவி புத்ல்வற் பயந்து இல்ல றத்துப் பெரிதுஞ் சென்ற 29. தற்றிணை 106.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/35&oldid=812786" இலிருந்து மீள்விக்கப்பட்டது