பக்கம்:பாட்டுத் திறன்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 34f டுத் தொடக்கம்) புதியபாணியில் கவிதைகள் முகிழ்க்கத் தொடங் கின. தொடக்கக் காலத்தில் யாப்பு முறைகட்குக் கட்டுப்படாமல் கவிதை உணர்வுகட்குச்சுதந்திரமான எழுத்து வடிவம்கொடுக்கும் இப்படைப்பு முயற்சி வசன கவிதை என்றே வழங்கப் பெற் முள்ளது. புதுக் கவிதை பண்டிருந்து பழக்கத்தில் இருந்து வரு கின்ற-மரபு கெடாது அமைந்துள்ள-ஒன்றிலிருந்து சிறிதோ முற்றிலுமோ மாறுபட்டுத்தோன்றுவதைப்புதிது என்று சொல்ல லாம். வழி வழியாக மரபு கெடாது யாப்பு இலக்கணத்தோடு பொருந்தி வரும் கவிதைகளினின்றும் மாறுபடும் கவிதைப் படைப்புதான் புதுக்கவிதையாகும். புதுகவிதை இன்னதென் பதை ஒரு புதுக் கவிதையே விளக்குகின்றது. இலக்கணச் செங்கொல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு மோனைத் தேர்கள் தனி மொழிச் சேனை பண்டித பவனி இவை யெதுவும் இல்லாத கருத்துகள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக் கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக் கவிதை: இதே சமயத்தில் மரபுக் கவிதையை எள்ளும் பாங்கில் ஒரு புதுக் கவிதையை படைத்துக் காட்டுகின்றார் ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியை யாப்புக்கிழவி' என்ற தலைப்பில். அதோ வருகின்றாள் யாப்புக் கிழவி! எதுகை முதுகைப் பூட்டுவில் போலக் கூனிக் கொண்டு மோனை வாயால் வாழ்த்துவசை இரண்டும் முணுமுணுத்தபடி சுரையாழ அம்மி மிதப்ப' என்ற பாட்டைச் சுறுசுறுப் பில்லாமல் அராகமாய்ப் பாடிக் கொண்டு - 2. ஊர்வலம் - பக். 70