பக்கம்:பாட்டுத் திறன்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 岛孪5 இந்தக் கவிக்குவில்கள் எழுத்துக் கிளைகளிலே இளைப்பாறும் கருத்துக் கவிக்கூட்டில் கண்ணுறங்கும் புரட்சி அணிவகுப்பில் போய்க் கூவும் இந்தக் கவிச் செடிகளின் கிழல் கூடப் பூக்கும்-இதன் கிணைவுகளும் விதை விதைக்கும் புதுக்கவிதை உலகில் புகுவார்க்கு இக்கவிதைப் பகுதிகள் வழி காட்டியாக அமைதல் கூடும்; பாயிரமாகவும் பணியாற்றும். கவிதையின் இறுதியில, தேடுங்கள் இந்த மரங்களின் தளிர்களில்கூடக் கனிகள் அகப்படும். என்று கூறுவது புதுக் கவிதையின் பாங்கையே. அறிவித்து விடுகின்ற்து. - புதுக்கவிதையின் மூலம்: ரிஷி மூலம்,நதி மூலம் இவற்றைக் காண்பது எளிதல்ல என்று கூறுவதில் உண்மை உண்டு.ஆனால் புதுக்கவிதையின் மூலத்தை ஒருவாறு அறுதியிட்டுவிடலாம். கவிஞர் சி. சுப்பிரமணிய பாரதியார் தமது எல்லாக் கவிதை களும் ப்ண்டிருந்து வரும் கவிதைகளினின்றும் சிறிதோ முற்றி லுமோ மாறுபட்ட படைப்புகளாக அமைந்த காரணத்தால் அவற்றைப் புதுக்கவிகை (கவ கவிதை) என்றே குறிப்பீடு கின்றார். - . சுவை புதிது, பொருள்புதிது. வளம் புதிது. சொற் புதிது சோதிமிக்க - வகவிதை' என்று அவர் தமது கவிதைகளைப்பற்றிக் குறிப்பிடுவதைக் காண்க. 'எளிய பதங்கள் எளியநடை, எளிதில் அறிந்து கொள் ளக்கூடிய சக்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற். றினையுடைய காவியமொன்று தற்காலத்தில் செய்து தருவோன். நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்.

கவிதைகள் வெங்கடேச செட்ட μti8-{2}-3.