பக்கம்:பாட்டுத் திறன்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 347 தன் பாட்டு நெருப்பில் போட்டுப் பொசுக்கினான்: இது பாரதி ஒரு பிள்ளையார் சுழி' என்ன்ற புதுக்கவிதையில் ஒரு பகுதி: வருணாசிரம தருமத்தை வெறுத்த பாரதியின் கருத்தைப் பளிச்சிட்டுக் காட்டுவது. வசனம் போன்ற இதில் கவிதை மின்னுவதைக் காண்க. இசையைப்பற்றிய ஒரு கவிதையில், ரோமாபுரி பூம்புகார் இரண்டிலும் இசைக்குப் பெருமை தந்த நகர் எந்த நகர் தெரியுமா? பூம்புகார்தான். எனென்றால் ரோமாபுரி எரிந்தபோது நீரோ ஃபிடில் வாசித்தான் மதுரை எரிந்தபோது மாதவி - யாழ்வாசிக்க வில்லை. மாறாக அன்று முதல் யாழ் வாசிப்பதையே கிறுத்தி விட்டான், என்ற பாடற்பகுதியில் ஒரு சாதாரணக் கருத்து கவிதையேறி அற்புதமாகத் திகழ்வதைக் காணலாம். இப்பகுதிகளை மேலோட்டமாகப் படிக்கும்போது வசனம்'போல் நடக் கின்றது; சற்றுச் சிந்தித்துப் படிக்குபோது கவிதை யாகி விடுகின்றது. சிறகுடன் பறப்பது போன்ற உணர்ச்சி மேலிடு கின்றது. : . . . செய்யுள், உடைகடை என்ற இரண்டிலும் கவிதை தென் படும் என்பது உண்மையே யாயினும், கவிதையின் கருப் 8. வாலி பொய்க்கால் குதிரைகள்-பக் 2.18) 9. மேத்தா, மு : ஊர்வலம்-பக் 20-24