பக்கம்:பாட்டுத் திறன்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 பாட்டுத் திறன் பொருளுக்கிணங்கத் தான் மேற்கொள்ள வேண்டிய சாதனத்தை அறுதியிட்டுக் கொள்ளுகின்றான் கவிஞன். புதுக்கவிஞர்களில் சிலர் செய்யுள் வடிவத்திலும், சிலர் செய்யுள் உரைநடை என்ற இரண்டிலும், சிலர் உரை கடையில் மட்டிலும் தம் கவிதை களை அமைக்கின்றனர். ஆனால், புதுக்கவிஞர்கள் அனைவருமே கவிதை வசனத்தில் இயங்கும் என்று ஒருமுகமாக் ஒப்புக் கொள்ளுகின்றனர். இதனால் நாம் அறிந்து கொள்வது : 'இன்றைய கவிஞர்கள் யாப்புணர்வு இல்லாமல் தம் கவிதை களைப் படைக்கின்றனர். தாம்மேற்கொள்ளும் சாதனம் செய்யுளா? வசனமா? என்று அவர்கள் அலட்டிக் கொள்ளுவ தில்லை.இவை இரண்டுமே கவிதையின் உண்மையான வடிவம். 'புராணத்தில் வரும் மன்மதனை ஒவியத்தில் எழுதிக் காட்டு வதற்கு ஒப்பானதாகும். சிவனால் எரிக்கப்பட்ட மன்மதன் ரதிதேவியின் கண்களுக்கு மட்டிலும் தென்படுவானாம். அதுபோல் இலக்கணத் தெய்வத்தின் நெற்றிக்கண் கெருப்பிற்கு இரையான புதுக்கவிதையின் உருவமும் உண்மையான இலக்கிய ரதிகளுக்கே தென்படக் கூடும்". கவிதையின் கருத்து வெளிப் படும் அழகே கவிதையின் வடிவம். ஒரே பாவினத்தில் எழுதப் பெறும் இரண்டு கவிதைகள் வடிவத்தில் ஒன்றுபோலக் காணப் பெற்றாலும் அவை வெவ்வேறு வெளியீட்டுத் தன்மையைக் கொண்டிருக்க முடியும். எடுத்துக்காட்டாகத் திருமங்கையாழ் வாரின் திருப்பாசுரங்களும் திருநாவுக்கரசரின் திருப்பாடல்களும் தாண்ட்கப் பாணியில் ஒன்று போலத் தோன்றினாலும் அவற்றின் வெளியீட்டுத்தன்மை வேறுபட்டிருப்பது நுணுகி உணர்வார்க்கே புலனாகும். அங்ங்னமே பாரதிதாசனும் சுரதாவும் எண்சீர் விருத்தத்தில் கவிதைகள் படைத்தாலும் அவற்றின் வெளியிட்டுத் தன்மை வேறுபட்டிருப்பதைக் காண லாம். இவ்வாறு உணர்த்தும் முறை கவிஞர்களின் மனவெளிக்குப் புலப்படும் குக்குமத் தன்மை கொண்டது. எனவேதான் புதுக்கவிதையின் உருவம் திருமலை காயக்கர் தூணைப் போலத் தாலமாகத்தெரிவதில்லை' என்று எழுதி னார் மீரா.1 10. மீரா புதுக்கவிதையின் உருவம் (அன்னம் மலர்-1978) 11. டிெ.