பக்கம்:பாட்டுத் திறன்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் - 351 இலக்கியச் சுவைஞர்களும் பல்வேறு கோலங்களில் மலரும் புதுக் கவிதைகளைச் சுவைத்து, அசை ப்ோட்டு, இன்புறுகின் றனர். புதுக்கவிதையின் உருவம் இப்படித்தான் இருக்கும்என்றும், இருக்க வேண்டும் என்றும் வரையறை செய்து கட்டல் இய லாது. அது அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியைத் தரும் அற்புத ஆற்றலை கொண்டு மிளிர்வது. கடவுளின் இருப்பைப்பற்றிக் கம்பகாடன் பிரகலாதன் வாய் மொழியாக, சாணினும் உளன்; ஓர் தன்மை அணு வினைச் சதகூறு இட்ட கோனினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்;இங் கின்ற தூணினும் உளன்:t சொன்ன சொல்லினும் உளன்." என்று சொல்லுவதைப் போல் அந்த வடிவம் எங்கும் எப்படியும் இருக்கும். இறைவன் அர்ச்சாவதாரக்' கோலமாய் எழுந்தருளி தமருகுகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே (ஆம்)" என்று கூறிப் போக்தார் பொய்கையாழ்வார். பக்தர்கள் கல்லை யோ மண்ணையோ உலோகங்களையோ எதை உருவமாக்கினா லும் அதையேதனக்கு ஒப்புயர்வற்ற உருவமாகக்கொள்வார்கள் என்பது பொய்கையாழ்வாரின் கருத்து.அங்ஙனமே, புதுக்கவிதை நாயகியும் அவளைப் படைப்பவனின் மனப்பக்குவத்திற் கேற்ப வும், கையாளப்படும் மொழியின் களினத்திற்கேற்பவும் வடிவம் பெறுவாள் என்று சொல்லி வைக்கலாம். அப்பர் பெருமான், இப்படியன் இங்கிறத்தன் இவ்வண்மைத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொனாதே’ என்று இறைவனை அப்படிப்பட்டவன் என்று வரையறை செய்து காட்ட முடியாது என்று கூறுவார். இங்கனமே புதுக் 2. கம்பரா. உயித்த இரணியன் வதை : 12. 3. முதல். திருவந். 44 4. தேவாரம் 8.97.19