பக்கம்:பாட்டுத் திறன்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 பாட்டுத் திறன் கவிதையின் வடிவம் குறித்து அமெரிக்கக் கவிஞரான எஸ்ரா பவுண்ட் (Ezra Pand) கூறியுள்ள யோசனைகள் புது மையானவை; வரவேற்கப்படத்தக்கவை. சொல்லவேண்டிய பொருளை நேராகச் சொல்ல வேண்டும்; மரபு வழியாகவரும் சம்பிரதாயச் சங்கிலிக்குள் மாட்டிக் கொண்டு பாடுவதைத் தவிர்க்க வேண்டும்; கவிதையையும் எளிமையாக்க வேண்டும் என்பது அவர் புதுக்கவிஞர்கட்குத் தரும் அறிவுரை. எஸ்ரா பவுண்ட் கவிதையின் வடிவத்தைப்பற்றி நன்கு சிந்தித்துத் தெளிவான கருத்துகளைக் கொண்டவர். கவிதையின் பொருளே அதன் வடிவமாகும் என்று கூறும் அளவுக்குத் தம் சிக்தனையை ஒட்டியவர். வடிவம் முழுமை தருவதற்கேற்பப் பொருளும் 5ம் மனத்தில் ஆழப்பதியும், படியும் என்று கம்பியே வடிவத்தை அமைக்கும் முறையில் தம் கருத்தை அதிகமாகச் செலுத்தினார் என்பதை ஈண்டு நாம் சிந்திக்க வேண்டும். இன்றைய புதுக்கவி தைப் படைப்பில் மரபினை அறிந்த கவிஞர்களே அதிகம் புகழ் பெற்றுத் திகழ்கின்றனர். இவர்கட்கு வடிவம்பற்றிய கருத்து மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இவ்விடத்தில் வால்ட் விட் மனின் கவிதைகளைப்பற்றிப் பாரதியார் இவர் கவிதைகளில் வடிவம் மாறுமே தவிர, அஃது அழிந்து விடாது' என்று குறிப் பிடுவதை காம் நினைவிலிருத்துதல் வேண்டும். அசை, சீர், தளை, தொடை-என்ற யாப்புக் கூறுகளின்றியே புதுகவிதை ஒருவடிவத்தைப் பெறுகின்றது; இது காரணமாகவே அது தன்னையும் தெளிவாக இனம் காட்டுகின்றது.