பக்கம்:பாட்டுத் திறன்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 பாட்டுத் திறன் என்பது என்று படிமத்தைப்பற்றி எஸ்ரா பவுண்ட் கூறி யுள்ளது ஈண்டுக் கருதத் தக்கது. ஓர் ஓவியமோ சிற்பமோ தன்னைச் சொற்கள் மூலமாக வெளிப்படுத்திக் கொள்கிற ஒருவித கவிதையே படிமம் ஆகும் என்று மேலும் விளக்குவர் அந்த அறிஞர். அழகின் உச்சியைப் படிமம் என்று கூடச் சொல்லிவைக்கலாம். சிறந்த கவிஞர்கட்கு இஃது இராமன் கைவில்போலவும் இராவணன்கை யாழ்போலவும் சொன்னபடி யெல்லாம் ஏவல் கேட்டுகிற்கும். இதனை இவர்கள் வற்புறுத்தி பலவந்தப்படுத்தி - வேலை வாங்கவேண்டிய அவசியமே இல்லை. கருத்துகளைப் பருப்பொருளாக உருவகம் செய்து விளக்கு வதிலும் வருணிப்பதிலும் எந்த அளவுக்குத் தெளிவான முறை கையாயப் பெறுகின்றதோ அந்த அளவுக்குப் பயன் விளையும் என்பது படிமக் கோட்பாளர்களின் கொள்கையாகும். இவர்கள் பொது மக்களின் பேச்சு மொழியைப் பயன்படுத்தி அதன் மூலம் ஒருபுதிய ஓசை நயத்தை உண்டாக்க முயல்வர். பாடுபொருளைத் தேர்ந்தெடுப்பதில் முழு உரிமையை வேண்டுவர் இவர்கள். இவர் கள் எளிமையையும் தெளிவையும் வலியுறுத்தினாலும் கவிதைக் குச் செறிவு இன்றியமையாதது என்றும் கருதுவர். (2) குறியீடு ; புதுக்கவிதையின் முக்கியமான உத்தி இது. கவிதைப் பொருளை அழகுபடச் சொல்லுவதற்குப்-எழி லூட்டி எடுத்து இயம்புவதற்குப்-பெரிதும் இந்த உத்தி பயன் படுகின்றது. அழகும் கவர்ச்சியும் துண்மையும் கொண்டு இயங்கும் குறியீடு கவிஞனின் உணர்வைப் படிப்போரின் மனத்தில் பாய்ச்சவல்லதாகத் திகழ்வதைக் காணலாம். பாரதிஒருபிள்ளையார் சுழி' என்ற கவிதையொன்றில் குறியீடுகள் அற்புதமாய் அமைந்திருப்பதைக் காணலாம். பாரதி புதிய தமிழுக்குப் போடப்பட்ட பிள்ளையார் சுழி... 5. பொய்க்கால் குதிசைகள்-பக் 32,