பக்கம்:பாட்டுத் திறன்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 22 உள்ளடக்கம் "இலக்கியம் இலக்கியத்திற்காகவே', 'கவிதை கவிதைக் காகவே கலை கலைக்காகவே' என்ற கொள்கைக் குரல்கள் ஒய்ந்து போய், இன்பம் என்பது கவிதையின் ஒரு பயனாக இருக்கலாமேயன்றி அதுவே இலக்கியமாகாது என்ற உண்மை ஞானம் தட்டுப்பட்டு வாழ்க்கையின் திறனாய்வே கவிதை' என்ற கொள்கை அங்கீகாரம் பெற்று, கலை சமுதாயத்திற் காகவே' என்ற முடிவுக்கு வந்து விட்டது இலக்கியத் திறனாய்வு. சமுதாய வாழ்வைச் சித்திரிப்பதும், சமுதாய மேன்மைக்கு வழிகோலுவதும், வழிகாட்டுவதும் இலக்கியத்தின் இயல்புகள் என்பனவாக ஏற்றுக் கொள்ளப் பெற்ற முடிவுகள். புதுக்கவிதைகளைப் படைப்போர் இவற்றை நன்கு உணர்க் துள்ளனர். எனவே. தம் கவிதைகளை இந்த உணர்வோடுதான் படைக்கின்றனர். இக்கருத்துகளையே-கொள்கைகளையே என்று கூடச் சொல்லலாம்-தம் கவிதைகளின் உள்ளடக்க மாகவும் கொள்கின்றனர். இன்று நூல் வடிவமாகவும் பருவ இதழ்கள் வாயிலாகவும் வெளிவந்திருக்கும்-வெளிவந்து கொண்டிருக்கும்-புதுக்கவிதை களை ஆய்ந்தால் இரண்டு விதமான கருத்தோட்டங்கள் தெளி வாகத் தெரிகின்றன. ஒன்று, தனி மனிதப் பார்வையை அடித் தளமாகக் கொண்டது. மற்றொன்று, சமுதாய கோக்கினையே கிலைக்களமாகக் கொண்டது. முதல்வகைக் கருத்தோட்டம் எஸ்ரா பவுண்டையும், டி.எஸ்.எலியட்டையும் வழிகாட்டி களாகக் கொண்டு நடைபெறுகின்றது. இரண்டாவது வகைத் கருத்தோட்டம் மயாகோவ்ஸ்கியையும் அவர் போன்ற வேறு சில இரஷ்யக் கவிஞர்களையும் முன்னோடிகளாகக் கொண்டு நடக் கின்றது. இவ்வாறு இரண்டுப் பிரிவுகளைச் சார்ந்த கவிதை களிலும் குற்றங்கள் காட்டப்பெறுகின்றன. இரண்டு கட்சி யினராகப் பிரிந்து கிற்கும் புதுக் கவிஞர்களும் ஒருவரையொரு