பக்கம்:பாட்டுத் திறன்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் . 369 வர் குறை கூறிச் சாடுகின்றனர். இதனைப் பற்றி காம் சிறிதும் கவலை கொள்ள வேண்டியதில்லை. வேறுபட்ட சிந்தனை யோட்டங்களும் வளர்ச்சியை நோக்கிச் செல்வதால் நாம் மன நிறைவும் மன அமைதியும் கொள்ளலாம், இன்றைய புதுக்கவி தைகளின் உள்ளடக்கம் கமது மரபுகட்கு அப்பாற்பட்டு விரிந்த பார்வையுடன் செல்லுகின்றது என்பதில் சிறிதேனும் ஐய மில்லை. உலகத்தின் பல்வேறு புதிய புதிய வளர்ச்சிகளின் தாக்கம் பெறாமல் தேங்கிக்கிடந்த தமிழ்க் கவிதை அகன்ற வானில் இராக்கெட்டு வேகத்தில் பறக்கத் தொடங்கியிருப்பது பெரியதொரு முன்னேற்றத்தின் அறிகுறியாகும். 'பல பக்கங்கள் கொண்ட வைரக்கல் போன்றது. புதுக் கவிதை. ஒருபக்கம் அழகு, புதுமாதிரியானஅழகு, வியக்கும் அழகு, ஒரு பக்கம் ஏக்கம், மனமுறிவு, பெருமூச்சு, காதல், தத்துவம், கோபம், சந்தேகம், அறை கூவல், சமகால விமர் சினங்கள், தன் மனத்தையே தேர்ந்தெடுத்து ஆராயும் நேர்மை, பாலுணர்ச்சி, பொங்கல், ரேஷன், காந்தியம், கம் யூனிசம், அறச்சீற்றம், ஸ்வதரிசனம், டிவேல்யுவேஷன், காலை, இரவு, கிலா வருணனைகள் கனவு மயக்கநிலைகள், ஞானம், உபதேசம், இறுமாப்பு, மனமாறுதல்-இப்படிப் பலபலப் பக்கங்கள் உண்டு. சுருங்கச் சொன்னால் இன்று கம்மிடையே இருக்கும் உணர்ச்சிகள் அராத்தின் பிரதி பலிப்பையும் காம் புதுக்கவிதையில் காண்கின்றோம்' இவ்வாறு புதுக்கவிதை பற்றிய ஒரு கட்டுரையில் கூறப்பெற் இறுள்ள பகுதி புதுக்கவிதையின் உள்ளடக்கத்தை விளக்கு கின்றது. . - - இன்றைய புதுக் கவிதையின் உள்ளடக்கத்தில் நல்ல விரிவைக் காண்கின்றோம்; அகன்ற நோக்கும் தட்டுப் படுகின்றது. வரை யறைகள் இல்லாததால் கவிதையின் உருவம் மாறியிருப்பதைப் போல் உள்ளடக்கமும் உலகளாவிய பார்வையைப் பெற்றுத் திகழ்கின்றது. வடிவம் இறுக்காக இராததால் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்று கிடைத்துள்ள வாய்ப் பினை ஆக்கமுறையில் பயன்படுத்துகின்ற கவிஞர்களால் உள்ள i. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்-பக் 194 ( La) äå rಕಿ ೩೯à: 8 ಆಥಿಲು ತಿ@ಣ8) . : • , பா-24 -