பக்கம்:பாட்டுத் திறன்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 பாட்டுத் திறன் அமுத சுரபியைத்தான் நீ தந்து சென்றாய் இப்போது எங்கள் கைகளில் இருப்பதோ பிச்சைப் பாத்திரம் நமது பொருளாதார அவலங்களைக் கண்டு ஏற்பட்ட துயர் கவிதையில் வெளிப்படுகின்றது. கண்ணன் காட்டியவழி' என்ற தலைப்பில் சமூகத்தில் காணப்படும் சில ஆஷாடபூதி களை ஒரு கவிதை பிட்டு வைக்கின்றது. பலரிடம் திருடி ஒருத்திக் குதவி அவன் அனாதை ரட்சகன் ஆனான். ஊரைச் சுரண்டி வழிவிடு முருகன் திருக்கோயிலுக்குக் குடமுழுக் காட்டி இவன் பெரிய தருமிஷ்டன் ஆனான் கந்து வட்டிக் கந்தசாமி கண்ணன் காட்டிய வழியில், இத்தகையவர்கள் பக்தியைத் திசைமாறறுவதால் உண்மைப் பக்தர்களின் மதிப்பும் குறைந்து விடுகின்றது, கறுப்புப் பணப் புழக்கத்தால் உண்மைப் பணத்தின் மதிப்பு (Value) குறைந்து விடுவதைப்போல. தத்துவ தரிசனம் : சிறுவயதில் இளம்பிள்ளைவாதத்தால் தாக்குண்டோ, பிறவியிலேயே ஏற்பட்டதனாலோ நடக்க முடியாமல் கைகளையும் ஊன்றிக்கொண்டு கடந்து செல்லும் பரிதாபகரமான மனிதர் ஒருவரைக் கண்டு பச்சாதாபப் படுகின்றார் கவிஞர் மு. மேத்தா உணர்வு தத்துவதரிசனம் என்ற தலைப்பில் ஒரு புதுக்கவிதையாக வடிவெடுக்கின்றது. 15. ஊசிகள்-புக் 9ே