பக்கம்:பாட்டுத் திறன்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 பாட்டுத் திறன் ககரத்தில் அடிக்கடிக் காணும் நேர்க் காட்சியை மனத்தில் கொண்டோ இந்தக் கவிதையைச் சுவைக்கும் போது கூன்குருடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது’ என்ற பண்டைக்காலக் கவிதையின் வரிகள் மனத்தில் பளிச்சிடும். 'திண்டாமை குறித்து ஒன்றிரண்டு கவிதைகள் காணப் பெறுகின்றன. வள்ளி சிரித்தாள்' என்ற தலைப்பில் ஒரு கவிதை: சப்பரத்திலே வள்ளியும்,'முருகனும், காஷ்லைட் தூக்கியவாறு கான் முன்னால் சென்றுகொண் டிருந்தேன். அபிஷேகத்திற்காக பன்னீர்ப் பாட்டலுடன் வந்த பட்டர் என்மீது மோதிவிட்டார். "டேய் மடப்பயலே தீட்டாச்சேடா கான் குளிச்சிட்டில்லேடா சாமிகிட்ட போகணும்' நான் சப்பரத்தைப் பார்த்தேன் வள்ளியின் உருவம் சிரித்துக் கொண்டிருந்தது. நல்ல கிண்டல் தீட்டைப் பொருட்படுத்தாது இறைவனே வேடர் குலத்துப் பெண்ணை மணந்து கொண்டதை கினையா மலே, அந்த இறைவனுக்குப் பூசனை புரியும் பட்டர் தீட்டைப் பற்றி பேசுகின்றார்! இன்று சமூக விரோதியாகக் கருதப் பெறுபவன் வியாபாரி' இவனைப் பற்றி ஒரு கவிதை' இவன் பதுக்கிய மூட்டைகள் சூறையாடப்பட்டபின் தனியே கிடந்தது இவனது சடலங்தான் இவன் கலப்படம் செய்த கல்லாலும் மணலாலுமே இவனது கல்லறை எழுப்பப் பெற்றது உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வோர்மீது எழுந்த கவிதை இது. மருந்துகளிலும் கலப்படம் செய்யும் மறலித் தூது 18. கோழிக் குட்டிகளும் பன்றிக் குஞ்சுகளும் - பக், 41 வெள்ளை இருட்டு - பக்,89 -