பக்கம்:பாட்டுத் திறன்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 381 வர்களும் உள்ளனர்! விலைவாசி' என்ற தலைப்பில் ஒரு கவிதை. எல்லோருக்கும் இது சுவையாகத்தானிருக்கும். விற்போரின் முதலிரவு வாங்குவோரின் வயிற்றெரிச்சல் ஆள்வோரின் அனாதைகள எதிர்த்தரப்பின் ஏகவாரிசுகள். திரும்பத் திரும்பக் கவிதையைப் படிக்கும்போது சினம் சீறி எழு கின்றது. என்ன செய்வது? தீராத நோயாகி விட்டதே. ‘பதுக்கல் காரர்கள்' என்ற தலைப்பில் ஒரு கவிதை. இஃது இவர்களை இருளின் புதல்வர்கள், அதிேயின் நாகங் கள்', 'பற்றாக்குறைக்குப் பாலூட்டி வளர்க்கும் கொடிய கும்பல் கள்', அமாவாசை கிலவுகள்', 'அழுகிய முட்டைகள்', 'கருகும் ஆன்மாக் காரர்கள்', 'எங்கள் விழிர்ேக் கழனியில் கொழுத்து விளையும் கோரைகள்' என்றெல்லாம் உருவகித்துச் சாடு கின்றது. இறுதியில் முத்தாய்ப்பாக, கொடுங்குளிர்க் காலங்களே-பெருங் கொள்ளைக் காரர்களே!-ஏழையர் மடங்கிய வயிறுகளே-உம்மை விழுங்கிடும் ஒர்நாளே! என்று கவிதை முடிகின்றது. புரட்சி வந்தால் உள்ளுர்க்காரர் களிடம் முதல் பலி-களப்பலி-யாவது இவர்களே. ஒரு தனிப் பாடலின் காகித உறவு என்ற தலைப்பில் ஒரு கவிதை: சமுதாயக கழனயல விடுபட்டுப் போன சின்ன காற்றே! 18. கதம்பம் (முருகன்) பக்.28 19. மானிட கீதம் பக்.9