பக்கம்:பாட்டுத் திறன்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 - பாட்டுத் திறன் காகித உறவு தேடி உன்கால்களில் சக்கரம்! வறுமைத் தண்டவாளத்தில் உன் வாழ்க்கைப் பயணம்! அன்றையக் கண்ணன் கைகளில் புல்லாங்குழல்; இன்றையக் கண்ணன் முதுகிலோ சணல் பைகள்! தான்வளரத் தானே நீரிறைத்து ஊற்றிக் கொள்ளும் தளிரே! நீ, யார் இயற்றிய தனிப் பாடல்? கதிரவன் கண் திறக்காததால் உனக்கொரு நிழல் துணை கிடைத்ததோ? பார்க்கலாம்! உன்னைக் கடந்து செல்லும் மனித இலக்கியங்களில் எந்தக் காப்பியம் உன்னை இடைச் செருகலாக அல்ல, வாழ்த்துப் பாவாக ஏற்றுக் கொள்ளப் போகிறதென்று! θ#ιρουπ சுரேஷின் இந்தக் கவிதை இருப்பூர்தி வழிக்கருகில் கிழிந்து போன குப்பைக் காகிதத்துண்டுகளைப் பொறுக்கிச் சேர்த்து விற்று வயிற்றைக் கழுவும் மானிட இளந்தளிரைக் காட்டி நம்மை நெகிழ வைத்து கம் கண்களைக் குளமாக்கி விடு கின்றது. இஃது அரசுக் கண்ணைத் திறக்க வேண்டும். திறக் குமா? திறக்காது. ஆண்டவன்தான் இத்தகைய தளிர்கட்கு" வேலை வாய்ப்பைக் காட்ட வழிவகுக்க வேண்டும். பெறுவான் தவம்' என்பது பொய்யாமொழியல்லவா?