பக்கம்:பாட்டுத் திறன்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 383 'டாக்டர்கள்," என்ற தலைப்பில் ஒரு கவிதை: என்றேனும் ஒருநாள் கின்று விடும் மூச்சை தவணை முறையில் நீட்டி கிறுத்தும் தரகு வியாபாரிகள், காசையே குறியாகக் கொண்ட மருத்துவர்களைச் சாடும் அங்கதம் இது 9. கல்வியின் நிலை பல கவிதைகள் இதுபற்றி எழுங் துள்ளன. ஒரு கவிதை." பி. யு. சி. யா? ஒரு நூறு போதும் பி. எஸ் சி, பி. எட் இரு நூறு ஆகும் எம். எஸ்சி ஆயிரம் எம். பி, பி, எஸ் ஏழு ஆயிரம் இங்கே சேர வாரும் செகத் தீரே. இங்கிலை எம்மருங்கும் காணப் பெறுவது. இன்று இந்த ரேட்டுகள்' இராக்கெட்டு வேகத்தில் ஏறிக்கொண்டே போகின்றன. மருத்துவ, பொறியியல் கல் ஆாரிகளில் இடம் பெறுவதற்கு இரண்டரை இலட்சம் வரை அழ வேண்டியுள்ளது. சிரிப்பதா? அழுவதா? ஏழைகள் உயர்கல்வி பெறுவது எப்படி? நகைச் சுவையை விளைவிக்கும் எள்ளல் குறிப்பு இங்கு ஊசி போல் குத்துகிறது. இவர் குத்துளசியார் மரபில் வந்த கவிஞர் போலும் கல்வி சிறந்த தமிழ் நாடடில் இந்த நிலை காணப் பெறுவது வெட்கம் வெட்கம்!! 20. தீ - தொகுப்பு (மே 1978). 21. ஊசிகள். பக், 85