பக்கம்:பாட்டுத் திறன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாட்டுத் திறன் தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ' (கொண்டல்-மேகம்; முழவு-மத்தளம்; திரை-அலை; எழினி-திரைச்சீலை, தேம்பிழி-இனிய தேனை யொத்த) இது மருத நிலம் என்ற மன்னன் கொலுவீற்றிருக்கும் காட்சியைக் காட்டும் பாடலாகும். மயில்கள் ஆடுதல் இயக்கப் புலப் படிமம்; தாமரை விளக்கம் தாங்குதல், குவளை கண் விழித்து நோக்குதல், தெண்திரை எழினிகாட்டுதல் இவை கட்புலப் படிமங்கள்; கொண்டல் ஒலித்தல், வண்டுகள் இனிமை யாகப் பாடுதல் இவை செவிப் புலப் படிமங்கள். இவைகலந்து நிற்கும் கிலையில் பாட்டதுபவம் கொடுமுடியை எட்டிவிடு கின்றது. பாரதியில் ஒன்றைக் காட்டுவேன். அன்னங்கள் பொழிற் கமலத் தடத்தின் ஊர அளிமுரல கிளிமழலை அரற்றக் கேட்போர் கன்னங்கள் அமுதுறக் குயில்கள் பாடும் காவினத்தின் நறுமலரின் கமழைத் தென்றல் பொன்னங்க மணிமடவர் மாட மீது - புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச வண்ணங்கொள் வரைத்தோளார், மகிழ மாதர் மையல் விழி தோற்றுவிக்கும் வண்மை காடு ?? என்ற பாடலில் அன்னங்கள் தடத்தில் ஊரல், தென்றல் வீசுதல் இவை இயக்க நிலைப் படிமங்கள்; அளிமுரலுதல், கிளி மிமுற்றுதல், குயில்கள் பாடுதல் இவை செவிப்புலப் படிமங்கள்; அன்னங்கள் பொற்கமலத்திருத்தல், அளி, கிளி, குயில்கள். காவினத்து நறுமலர்கள், பொன்னங்க மணிமடவார், வண்ணங் கொள் வரைத்தோளார். இவை கட்புலப்படிமங்கள். இவை யாவும் கலந்தமைந்து கவிதைக்குப் பொலிவூட்டுவதைப் பாடலைப் பன்முறை படித்துப் படிமங்களை மனத்திற் 88. பால, காட்டு-4 37. பாஞ்சாலி சபதம் 1, 17 ; 117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/40&oldid=812898" இலிருந்து மீள்விக்கப்பட்டது