பக்கம்:பாட்டுத் திறன்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 393 இஃது இன்றையப் பெண்ணின் மனோபாவனையைக் காட்டுவது. கனவுகளைக் கண்களிலும் காதலை நெஞ்சிலும் சுமந்து கொண்டிருந்தாலும் எதிர்ப்புகளைத் தாண்டவியலாது தவிக்கும் பெண்மையைப் புலப்படுத்துகின்றது கவிதை. சிறை காக்கும் காப்பு இன்னும் சீரழியாமல் இருப்பதைக் கவிதை சுட்டிக் காட்டுகின்றது. இன்னொரு கவிதையின் ஒரு பகுதி. இப்படியே தொடங்குகின்றது கவிதை : உன் இதழ்களுக்கு உறக்கமாகும் மெளனம் உன் இமைகளில் மொழியாகுமோ? உள்ளத்தில் அழுத்தமாகப் பாயும்படிப் பாடும் ஆற்றல் இந்தக் கவிஞரிடம் இருப்பதால் 'சடங்குகளின் கைதிகள்' என்ற இக்கவிதை மிக அற்புதமாக வருகின்றது. படிமங்களின் பலத் துடன் பிறக்கும் அடிகள் கால ஓட்டத்தால் தோல்வியைத் தழுவிக்கொண்ட காதலின் துடிப்பை அருமையாக வெளியிடு கின்றன. வீரமும் காதலும் பண்டைய இலக்கியம் காட்டும் உணர்ச்சி கள். இன்றைய உலகில் பேனாவீரர் கட்குப் பஞ்சமில்லை; காதலுக்கும் பஞ்சமில்லை; புதுக்கவிதைகளில் அது நிறைய வருகின்றது. புதிய சூழ்நிலைகளில் புதுப்புதுக்கோலங்களில் தென்படுகின்றது. - அலுவல் அறைகளில் எற்றுண்டு இடறி காகிதக்கடலில் புரண்டு தவிக்கும் உன் ஒளிக்கண்கள்." என்பது ஒரு கவிதை. இந்த அடிகள் காதலைக் காம் உண்மை உலகின் யந்திரம் போன்ற மனித வாழ் 8, புதுக்குசல்கள் (வல்லிக் கண்ணன்:ன்க்ண்