பக்கம்:பாட்டுத் திறன்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 பாட்டுத் திறன் மாக விளக்குகின்றன. மனிதனையே ஒர் யந்திரமாக்கி விட்ட இக்காலத்தில் காதல் ஒரு முக்கியமான வாழ்க்கைக் கூறு என்று கருதிய போக்கு மாறிவருகின்றது. அன்றாடப் பிரச்சினைகளும் சமுதாயக் கட்டுப்பாடுகளும் காதலின் ஆதிக்கத்தைப் பெரிதும் குறைத்து வருகின்றன. காதல் உணர்வு மனத்தைச் சலனப்படச் செய்கின்றது என்பதை ஒரு புதுக்கவிதை பேசுகின்றது. பெண்ணிடம் மயங்கிப் பெற்றது என்ன்: பெருமூச்சு விடைகள் பேச்சின்றிப் பிறக்கும், தத்துவச் சுழிப்பில் தடுமாறும் உள்ளம், புயலாகும் மனது ஒரு பொழுதுக்கு ஒயும். ஆனால் மஞ்சளை சிவப்பை மணம் பரப்பும் டில்லிகை , கதம்பத்தை கண்டு விட்ட உடனே கண்போகும் பின்னே கிமிஷப் பொழுதில் கிறம்மாறும் ஒக்தி கிலையில்லா மனமே உனக் கெப்போது சாந்தி: இஃது ஆண்மனத்தைக் கூர்ந்து நோக்கிய பெண்ணின் குரல், உண்மையை ஏக்க பாவத்துடன் பேசுகின்றது. துட்பமான காதலுணர்வை-தெய்வீக வளர்ச்சியை-- வக்கிர உணர்ச்சியாகக் காட்டும் கவிதைகளும் காணப்பெறு கின்றன. ஃபிராய்டு ஆராய்ச்சியால் கண்ட அறிவியல் உண்மை களைச் சில புதுக் கவிஞர்கள் கொச்சையாக்கிப் புதுக் கவசம் போட்டுக் கொள்ளுகின்றனர். கான் எழுத்தாளன் மரபுப் படி கருவைத் தேடி அவளை காடினேன் ஏற்கெனவே அங்கே அது வளர்ந்து கொண்டிருந்தது.' 9. அகல்யா எழுதியது. கல்கி 31.5.81 இதழில் 10. இளம் பாரதி புதுயுகக் கனவுகள்