பக்கம்:பாட்டுத் திறன்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 395 இதில் கவிஞரின் தடுமாற்றம் புலனாகின்றது. மனவிகாரங் களையும் வக்கிரிப்புகளையும் கவிதைகளாக்குவதால் சமுதாயத் தில் புதிய நோய்கள் பரவும்; இப்போக்கு மிகவும் அபாயகர மானது. 'கற்பழித்தல் கற்பழித்தல்' அந்த வார்த்தையை அழி 'கருவூட்டல் கருவூட்டல்’’ என்று சொல்' படிப்பதற்கே அருவருப்பான இந்த அடிகளைக்கொண்ட இந்தக் கவிதையில் பாலுணர்ச்சி மஞ்சள் தனமாக வெளிப்படுகின்றது. ஃபிராய்டு கூட இவற்றைக் கண்டால் அதிர்ச்சியடைந்து போவார். இன்னொரு வக்கிரமான கவிதை. அழகா யில்லாததால் அவள் எனக்குத் தங்கையாகி விட்டாள் ' இதைப் படிப்பதற்கே மனம் கூசுகின்றது. ‘இரங்கல்' என்ற தலைப்பில் இன்னொரு வக்கிரமான கவிதை. ஒரு கவிஞரின் மனைவி இறந்துவிடுகின்றாள். அறுபது அகவையை நெருங்கிய அவர் மிகுதியாக வருந்தி அழுகின்றார். அநுதாபம் தெரிவிக்கவந்த அவர்தம் நண்பர்கள் மனம் தளரா திருக்குமாறு அறவுரை பகர்கின்றனர். அவர்கள் திடுக்கிடும் வகையில் கடக்க வேண்டியது தான் கடந்தது!-காலம் கடந்து கடந்ததால் கண்ணிர் வந்தது! பத்தாண்டு களுக்குமுன் பாவி செத்திருந்தால்-இவள் உத்தமத் தங்கையை - மணந்திருப்பேன் கான்! 11. திவ்யதர்சனம் புதுப்பாடம்-பக் 108 18. பூத்தவெள்ளி-பக், 54