பக்கம்:பாட்டுத் திறன்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 39? இந்தப் போக்கில் செல்வது வருத்தத்தைத் தருகின்றது. ஆயினும் மீரா, சிற்பி, காமராசன், மேத்தா போன்ற சிலகவிஞர் கள் தெளிவுடன் காதல் உணர்ச்சியைப் பாடுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. அழகென்பது ஒருதத்துவம். அதுவே அழகுணர்வு, முருகு ணர்வு என்றெல்லாம் பேசப்பெறும். உலகில் அழகுக்கு ஒருவரை யறை காண்பது, அவ்வடிவத்தைப் படைப்பவரின் தொழில் குறைவினாலேயன்றி, அமுகென்னும் பொருளுக்கோ எல்லை இல்லை' என்று சித்தாக்தம் செய்து காட்டுவான் கம்பன் சூர்ப்பனகையின் வாய்மொழியாக." பாரதிதாசனின் அழகின் சிரிப்பு' என்ற நூலில் பல்வேறு நோக்கில் அழகு பிழிந்து காட்டப் பெறுகின்றது. புதுக் கவிஞர்களும் அழகினைப் பல்வேறு கோணத்தில் தொட்டுக் காட்டுவதில் தவறவில்லை. வானம் மழை நீரால் வாயைக் கொப்பளித்து மோன இதழ் திறந்து - முறுவலிக்கும் பின் பொழுது: இப்படி அவள் அழைக்கிறாள்' என்ற கவிதை சொட்டும் அழகுடன் தொடங்குகின்றது. மாலையழகினை ‘மாலையழகு" என்ற மற்றொரு கவிதை காட்டி மனம் மகிழச் செய்கிறது. மொட்டுச் சிரிப்பவிழும் முல்லைக் கொடியினைத் தொட்டுத் தழுவிற்று தென்றற் புதுக்காற்று. சிட்டுக் குருவிகளும் விட்டுப் பிரியாமல் தொட்டுக் குலவிற்று . தென்னையிளங் கீற்றினிலே! என்ற கவிதை அழகுணர்ச்சி ததும்பும் போக்கில் தொடங்கு கின்றது. . - 其强。 கம்பன்.ஆாணி. சூப்பன.80 15. மானிட கீதம்-பக் 44 - 16. ஒற்றையடிப்பாதை பக்ம்.ே