பக்கம்:பாட்டுத் திறன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 39 கொணர்ந்து அநுபவிக்கும் போது கவிதையதுபவத்தின் கொடு முடியை எட்டலாம். சுவைகள்: கவிதைகளைப் பாடுங்கால் கவிஞர்கள் சுவை களையும் பாவங்களையும் இடத்திற்கேற்றவாறு அமைத்துப் பாடுவர். இவைபற்றிய செய்திகள் தொல்காப்பியத்தில் மெய்ப் பாட்டியலில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. சுவை என்பது நாடகத்திலும் காப்பியத்திலும் வெளிப்படுவது. அஃதாவது, 'காணப்படு பொருளாற் காண்போரகத்தின் வருவதோர் விகாரம்' என்பர் இளம்பூரணர். பாவம் என்பது மக்கள் உள்ளத்தில் ஒவ்வொருகால் எழும் உளவேறுபாடு. ஒவ்வொரு சுவையும் ஸ்தாயிபாவம், விபாவம், அனுபாவம், சஞ்சாரி பாவம் என நான்கு வகையான பாவங்களால் உண்டாகி வளரும் என்று வடமொழி இலக்கணம் கூறும். இவற்றுள் ஸ்தாயிபாவம் என்பது சுவை பிறக்குமளவும் நிலையாய் கிற்பது. சிருங்காரக் திற்குக் காதலும், ரெளத்திரத்திற்குக் குரோதமும் போல் அமை வன ஸ்தாயி பாவங்களாகும். நம் தொல்காப்பியர் சுவைகளை ககை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று எண்வகையாகப் பாகுபடுத்திக் கூறுவர். இவை ஒவ்வொன்றும் தத்தம் தோற்றத்திற்குக் காரணமாக அகத்தே தோன்றும் சுவைப் பொருளுக்கேற்பப் புறத்தே நான்கு வகைப்பட நிகழும் என்று அவற்றின் நுட்பத் தினையும் புலப்படுத்துவர். எடுத்துக்காட்டாக அழுகை என்னும் சுவை இளிவு, இழவு, அசைவு, வறுமை என நான்கு பற்றித் தோன்றும். இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளியராதல். இழவு என்பது தங்தை தாய் முதலிய சுற்றத் தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலாயவற்றையும் இழத்தல். அசைவு என்பது முன்னைய நல்ல நிலைமை கெட்டு வேறுபட்டு வருந்துதல். வறுமை என்பது போகக் துய்க்கப் பெறாத பற்றுள்ளம். இவை நான்கும் தன் கண் தோன்றினும் பிறர்கண் தோன்றினும் அழுகையாம். தன்கண் தோன்றிய இழிவுபற்றிப் பிறக்கும் அவலத்தை அழுகை என்றும், பிறர் கண் தோன்றிய இழிவுபற்றிப் பிறக்கும் அவலத்தைக் கருணம் என்றும் கூறுவர் பேராசிரியர். உரன்கெரிந்து விழஎன்னை யுதைத்துருட்டி மூக்கரிந்த ஒரன்இருந்து தோள்பார்க்க நான்கிடந்து புலம்புவதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/41&oldid=812920" இலிருந்து மீள்விக்கப்பட்டது