பக்கம்:பாட்டுத் திறன்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 399 அழகே! உன்னை கினைத்தாலும் என் உள்ளுணர்வில் இன்பம் பொங்கிப் பொங்கி யெழுந்து உடல் முழுதும் பாய்ந்து கிளுகிளுப்பினை உண்டாக்குகிறது. என்று கவிதை தொடங்கி, அழகினை கமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றது. அடுத்து அழகு அங்கிங்கெனாதபடி எல்லாப் பொருள்களிலும் இருப்பதை, உலகத்தின் எல்லாப் பொருள்களிலும் நீ இரண்டறக் கலந்துள்ளாய் நீ இல்லாத எதையும் யாரும் தீண்டுவதும் காண்பதும் இல்லை! உருவற்ற ே . எவ்வாறு இன்பம் அளிக்கின்றாய்? இன்பம்! இன்பம்! இன்பம்! இது நீயின்றி ஏது? நீயின்றி வாழ்வேது? நீயின்றி உலகமே ஏது? என்ற பகுதியில் காணலாம். அழகு உறையும் பொருள்களும் சுட்டியுரைக்கப் பெறுகின்றன. கருங்கல்லிலே பசுமை இலைகளிலே செம்மலரிலே நீல மேகங்களிலே மண்ணிலே விண்ணிலே வரையிலே எங்கும் நீயே கோயில் கொண்டுள்ளாய், அமுகென்பாள் காட்டியமாடும் இடங்களாக ஒரு பெரிய பட்டிய லையே இட்டுக் காட்டுகின்றார் கவிஞர். இளமென் கொடியின் அசைவிலே கானாற்றின் சளசளக்கும் அலைகளின் இன்ப கீத விளிம்பிலே