பக்கம்:பாட்டுத் திறன்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 பாட்டுத் திறன் கவிஞர்கள் காலந்தோறும்-கவிதைகளைப் புனைந்து பாடி, அழைத்துப் பார்த்தனர்! யார் அழைப்பையும் கிலவு ஏற்று வரவே இல்லை! வராத கிலவை விஞ்ஞானிகள் விட்டு விடவில்லை! விண்ணில் பறந்து போய் வெண்ணிலவின் தலைமீது ஏறிகின்று எட்டிப் பிடித்தனர் அம்புலிப் பயணத்தைக் கவிதை அற்புதமாகச்சித்திரிக்கின்றது. பிள்ளைத் தமிழில் அம்புலிப் பருவத்தைப் பற்றிப் பல்வேறு விதமாகக் கொஞ்சுவார்கள். கவிஞர்கள். அறிவியலறிஞர்கள் அம்புலியை அடைய முயன்று அம்முயற்சியில் வெற்றி பெற் றனர். அந்த வெற்றியைச் சுட்டுகின்றது இக்கவிதை. அந்தப் பிறை கிலா என்ற தலைப்பில், அண்மையில் முதலில் கல்கியிலும், பின்னர் நூல் வடிவிலும், வெளிவந்த கவிதை. சூரிய ரதத்தில் பூட்டப் பட்ட ஏழு குதிரைகளில்ஏதேனும் ஒன்றின் காலிலிருந்து கழன்று விழுந்து விட்ட 26. இவ்வாரிேயரின் அம்புலிப் பயணம் (கழக வெளியீடு) என்ற நூலைக் காண்க. அறிவியலறிஞர்களின் முயற்சி தெளிவாக விளக்கப் பெற் அள்ளது. 27. பொய்க்கால் குதிரைகன் பக். 10