பக்கம்:பாட்டுத் திறன்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் #95 இருட்டு அணிந்து கொண்டிருக்கும் கறுப்புச் சட்டையின் ஒட்டைப்பை வழியே-- எட்டிப் பார்க்கும் எட்டனா காணயமோ? ஆகாய மங்கை பூமியைக் - குணிந்து பார்க்கையில்... அவள் மேக ரவிக்கையை மீறிப் பிதுங்கிய மார்பகக் கதுப்போ? காலக் கிழவி கண்ணு றங்கப் போகுமுன்தன் பொக்கை வாயைக் கழுவிக் கழற்றிவைத்திருக்கும் பல் செட்டோ? அல்ல! அல்ல! பின்... என்னதான் அந்தப் பிறை கிலா? எங்கள் உழவர் பெருமக்கள்... கிலக் கிழார்கள் நெடும் பசிக்கே அறுவடை செய்து. அறுவடை செய்து. தங்கள் அரை வயிற்றுக் கஞ்சிக்கும் ஆலாப் பறக்கும் ஆத்திரத்தில்.