பக்கம்:பாட்டுத் திறன்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-24 மார்க்சியக் கொள்கை வழியில் முன்னோர் இயலில் கவிதையின் உள்ளடக்கம் சமுதாய நோக்கினையே சிலைக்களமாகக் கொண்டது என்றும் அது பெரும்பாலும் மாயகோவ்ஸ்கியையும் அவர் போன்ற வேறு சில இரஷ்யக் கவிஞர்களையும் முன்னோடிகளாகக் கொண்டு நடக்கின்றது என்றும் குறிப்பிட்டோம். இச்சமுதாய நோக்கு இன்றைய புதுக் கவிஞர்களிடம் பெரும்பாலும் மார்க்சியக் கொள்கை அடிப்படையில் நடைபெறுகின்றது. இவர்கள் மேற் கொண்ட இலக்கியக் கொள்கை சோஷலிஸ்டு எதிர்த்த வாதம்(So cialist realism) ஆகும். இது சமூக முரண்பாடுகளின் முதிர்ச்சி யால் முற்போக்கு வர்க்கங்களில் வேர்கொண்டு எழுந்ததாகும். இதைச் சமதர்ம மெய்ம்மையியல் என்றும் குறிப்பிடலாம், இஃது உண்மையை ஊகம் செய்யக் கூடிய, மறுக்க முடியாத வரலாற்று அடிப்படையில்புரட்சிகரமானமாற்றங்களைக்கணிப்பில்எடுத்துக் கொள்வதும், மிகவும் முற்போக்கானதுமான ஒருவகைக் கலை இயக்கமாகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரஷ் யாவில் முதலாளித்துவத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகளிலும், பொங்கிக் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களின் போராட்டங்களி லும், சோஷலிஸ்ட்டுப் புரட்சியின் முன்னேற்பாட்டிலும் இவ் விலக்கியக் கொள்கை தோன்றியது! உலக இலக்கியத்தில் முதன் முதலாகத் தொழிலாளர்கள் தலைமை மாந்தர்களாக இடம்பெறு வது இவ்வகைக் கலை, இலக்கியங்களில்தான். இவ்வகை இலக்கியத்திற்கு முதல் எடுத்துக் காட்டாகத் திகழ்வது கார்க்கி யின் அன்னை' என்னும் புதினமும், நாடகங்களுமாகும் சோஷ லிஸ்ட்டு எதார்த்தவாதம் பழங்காலக் கலையின் உன்னதமான மரபுகளின் சிறந்த தொடர்ச்சியாகவும், வளர்ச்சியாகவும், மனித னின் கலைப் படைப்பு வளர்ச்சியில் ஒரு புதிய கட்டமாகவும்