பக்கம்:பாட்டுத் திறன்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金贰 பாட்டுத் திறன் கண்ணின் கனல்பட்டுச் சுரண்டல் கருகுமெனப் பண்ணில் இழுக்காமல் பளிச்சென்று சொல்லுங்கள்: பாரத தேசத்தில் பரிணாமம் எழுதுகின்ற தலைவசந்தம் வருகுதென்று தைரியமாய்ச் சொல்லுங்கள்: கங்கை கதிதீரம்காவேரி கதியோரம் எங்கும் இந்தியாதான்! எவரும் இந்தியர்தான்! என்ற பகுதியில் பொதுவுடைமைக்கருத்துகள் பளிச்சிடுவதைக் காணலாம். தொழிலாளர் இயக்கமே சிலரைக் கவிஞராக்கு கின்றது. இத்தகைய கவிஞர்களை நடைமுறை வாழ்வின் கிளர்ச் சியோடு தொடர்பு கொண்டவர்களாகவே இனங்கண்டு கொள்ளலாம். சுரண்டப்படுவோரிடம் மெய்யான ஈடுபாடும் அனுதாபமும் கொண்ட சுயவாழ்வையுடையவர்கள் இவர்கள். தொழிலாளரைப்பற்றி எழுந்துள்ள கவிதையொன்றின், கண்ணிருக்கு வேர்வையைக் கல்யாணம் செய்து வைக்கும் உடைமை வர்க்கத்தின் புரோகிதர்கூட்டம் கடமை என்ற மந்திரம் ஒதுகின்றது! விழித்துக் கொள்கிற வேர்வைத் துளிகளோ கண்ணீரை விவாகரத்துச் செய்துவிட்டு இரத்தத்தின் கைகளில் விடுதலை காண்கிறது: என்ற பகுதியில் சுரண்டும் வர்க்கத்தின்மீது கவிஞர் கொண்ட் சினத்தைக் காணலாம். இவரையும் பாட்டாளிவர்க்கத்தின் ஒருவராகவே இனங்காட்டி விடுகின்றது. இதே கவிதையின், புரட்சிச் சேவல் - இந்நூற்றாண்டின் புலர்தலில் கூவிய பொழுது சோவியத் விழித்தது." 8. வெள்ளை இருட்டு பக்.98 9. டிெ பக்.98